இன்றைய (04-09-2021) ராசி பலன்கள், நட்சத்திர பலன்கள்... - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Friday, September 3, 2021

இன்றைய (04-09-2021) ராசி பலன்கள், நட்சத்திர பலன்கள்...

இன்றைய (04-09-2021) ராசி பலன்கள், நட்சத்திர பலன்கள்...



மேஷம்

செப்டம்பர் 04, 2021





மாணவர்களுக்கு கல்வி பணிகளில் ஈடுபாடு உண்டாகும். சகோதர உறவுகளின் மூலம் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். வாகன வசதிகள் மேம்படும். பிரபலமானவர்களின் அறிமுகம் உண்டாகும். தைரியமான செயல்பாடுகளின் மூலம் பொறுப்புகளும், பாராட்டுகளும் கிடைக்கும்.





அதிர்ஷ்ட திசை : கிழக்கு



அதிர்ஷ்ட எண் : 4



அதிர்ஷ்ட நிறம் : பொன் நிறம் 





அஸ்வினி : ஈடுபாடு உண்டாகும்.



பரணி : வசதிகள் மேம்படும்.



கிருத்திகை  :  பாராட்டுகள் கிடைக்கும்.

---------------------------------------









ரிஷபம்

செப்டம்பர் 04, 2021





எண்ணிய காரியங்களை எண்ணிய விதத்தில் செய்து முடிப்பீர்கள். வேலையாட்களின் ஒத்துழைப்பு மனதிற்கு திருப்தியை ஏற்படுத்தும். புதிய முயற்சிகளில் எதிர்பார்த்த பலன்கள் கிடைக்கும். வியாபார பணிகளில் இருந்துவந்த மந்தநிலை படிப்படியாக குறையும். அரசு சார்ந்த உதவிகள் சிலருக்கு சாதகமான பலன்களை ஏற்படுத்தும்.





அதிர்ஷ்ட திசை : வடக்கு



அதிர்ஷ்ட எண் : 2



அதிர்ஷ்ட நிறம் : இளம் மஞ்சள்





கிருத்திகை  : எண்ணங்கள் ஈடேறும்.



ரோகிணி : திருப்தியான நாள்.



மிருகசீரிஷம் : உதவிகள் கிடைக்கும்.

---------------------------------------







மிதுனம்

செப்டம்பர் 04, 2021





மறைமுகமாக இருந்துவந்த விமர்சனங்கள் குறையும். நிலுவையில் இருந்துவந்த தனவரவுகள் கிடைக்கும். உயர் அதிகாரிகளிடம் சூழ்நிலைகளை அறிந்து கருத்துக்களை வெளியிடவும். வியாபாரப் பணிகளில் மந்தமான சூழ்நிலைகள் உண்டாகும். கணவன், மனைவிக்கிடையே இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் மறைந்து நெருக்கம் அதிகரிக்கும்.





அதிர்ஷ்ட திசை : தெற்கு



அதிர்ஷ்ட எண் : 5



அதிர்ஷ்ட நிறம் : சாம்பல் நிறம் 





மிருகசீரிஷம் :  விமர்சனங்கள் குறையும்.



திருவாதிரை : சிந்தித்து செயல்படவும்.



புனர்பூசம் : நெருக்கம் அதிகரிக்கும்.

---------------------------------------







கடகம்

செப்டம்பர் 04, 2021





கூட்டு வியாபார பணிகளில் நிதானத்துடன் செயல்படுவது அவசியமாகும். எதிர்காலம் தொடர்பான சிந்தனைகள் மனதில் அதிகரிக்கும். சில பணிகளை செய்து முடிப்பதில் வேகத்தைவிட நிதானம் வேண்டும். எதிர்பாராத சில பயணங்களின் மூலம் அலைச்சலும், அனுபவமும் ஏற்படும். புதிய நபர்களின் அறிமுகம் உண்டாகும்.





அதிர்ஷ்ட திசை : கிழக்கு



அதிர்ஷ்ட எண் : 1



அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு நிறம் 





புனர்பூசம் : நிதானம் வேண்டும்.



பூசம் : அலைச்சல்கள் உண்டாகும்.



ஆயில்யம் : அறிமுகம் கிடைக்கும்.

---------------------------------------







சிம்மம்

செப்டம்பர் 04, 2021





கணவன், மனைவிக்கிடையே மனம்விட்டு பேசுவதன் மூலம் தெளிவும், புரிதலும் உண்டாகும். கடன் சார்ந்த பிரச்சனைகள் குறையும். வியாபார பணிகளில் இருந்துவந்த இழுபறிகள் மற்றும் பாக்கிகள் வசூலாகும். உத்தியோக பணிகளில் இருந்துவந்த பொறுப்புகள் மற்றும் நெருக்கடியான சூழ்நிலைகள் மறையும்.  மனதிற்கு நெருக்கமானவர்களின் மூலம் மாற்றமான சூழ்நிலைகள் உண்டாகும்.





அதிர்ஷ்ட திசை : கிழக்கு



அதிர்ஷ்ட எண் : 9



அதிர்ஷ்ட நிறம் : கருஞ்சிவப்பு





மகம் : புரிதல் உண்டாகும்.



பூரம் : நெருக்கடிகள் மறையும்.



உத்திரம் : மாற்றமான நாள்.

---------------------------------------







கன்னி

செப்டம்பர் 04, 2021





திறமைகளை வெளிப்படுத்துவதற்கான வாய்ப்புகள் கிடைக்கும். சகோதரர்களின் வகையில் நன்மைகள் ஏற்படும். சுபகாரியங்கள் தொடர்பான பயணங்கள் மற்றும் அதை சார்ந்த முயற்சிகள் அதிகரிக்கும். வாகனம் தொடர்பான பழுதுகளை சீர் செய்வீர்கள். வியாபாரத்தில் சில நுணுக்கங்களை புரிந்து கொள்வீர்கள். சமூகப் பணிகளில் இருப்பவர்களுக்கு புதிய பொறுப்புகள் கிடைக்கும்.





அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு



அதிர்ஷ்ட எண் : 8



அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம் 





உத்திரம் : வாய்ப்புகள் கிடைக்கும்.



அஸ்தம் : முயற்சிகள் அதிகரிக்கும்.



சித்திரை : நுணுக்கங்களை அறிவீர்கள்.

---------------------------------------







துலாம்

செப்டம்பர் 04, 2021





குடும்பத்தினருடன் சுபகாரியங்கள் தொடர்பான நிகழ்ச்சிகளில் கலந்துக்கொள்வீர்கள். அரசு தொடர்பான விஷயங்களில் எதிர்பார்ப்புகள் நிறைவேறும். வழக்கு சார்ந்த பணிகளில் இருந்துவந்த காலதாமதங்கள் குறையும். உத்தியோக மாற்றம் தொடர்பான சிந்தனைகள் மனதில் அதிகரிக்கும். பயணங்களின் மூலம் அனுபவங்களும், அறிமுகங்களும் உண்டாகும்.





அதிர்ஷ்ட திசை : வடகிழக்கு



அதிர்ஷ்ட எண் : 7



அதிர்ஷ்ட நிறம் : பழுப்பு நிறம்





சித்திரை :  சுபமான நாள்.



சுவாதி : எதிர்பார்ப்புகள் நிறைவேறும்.



விசாகம் : சிந்தனைகள் அதிகரிக்கும். 

---------------------------------------







விருச்சிகம்

செப்டம்பர் 04, 2021





விளையாட்டு தொடர்பான விஷயங்களில் ஆர்வம் அதிகரிக்கும். உடன்பிறந்தவர்கள் ஆதரவாக செயல்படுவார்கள். உயர் அதிகாரிகளின் ஒத்துழைப்பு கிடைக்கும். பயணங்கள் தொடர்பான விஷயங்களில் புதுவிதமான அனுபவம் உண்டாகும். ஆன்மிகம் தொடர்பான எண்ணங்கள் மேம்படும். ஆராய்ச்சி சார்ந்த பணிகளில் நுணுக்கமான சில விஷயங்களை அறிவீர்கள்.





அதிர்ஷ்ட திசை : தென்கிழக்கு



அதிர்ஷ்ட எண் : 4



அதிர்ஷ்ட நிறம் : ஊதா நிறம் 





விசாகம் :  ஆர்வம் அதிகரிக்கும்.



அனுஷம் : ஒத்துழைப்பு கிடைக்கும்.



கேட்டை : அனுபவம் உண்டாகும்.

---------------------------------------







தனுசு

செப்டம்பர் 04, 2021





புதிய முயற்சிகளில் எதிர்பார்த்த முடிவுகள் காலதாமதமாக கிடைக்கும். மற்றவர்களுக்கு உதவும் பொழுது சிந்தித்து செயல்படுவது அவசியமாகும். வியாபார பணிகளில் இழுபறியான சூழ்நிலைகள் உண்டாகும். உடன்பிறந்தவர்களின் வழியில் கருத்து வேறுபாடுகள் ஏற்படும். தேவையற்ற செலவுகளை தவிர்ப்பதன் மூலம் நெருக்கடிகளை குறைக்க இயலும்.





அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு



அதிர்ஷ்ட எண் : 5



அதிர்ஷ்ட நிறம் : இளஞ்சிவப்பு





மூலம் : காலதாமதம் ஏற்படும்.



பூராடம் : இழுபறியான நாள்.



உத்திராடம் : கருத்து வேறுபாடுகள் ஏற்படும்.

---------------------------------------







மகரம்

செப்டம்பர் 04, 2021





குடும்ப உறுப்பினர்களால் மகிழ்ச்சியான சூழ்நிலைகள் உண்டாகும். இழுபறியாக இருந்துவந்த பணிகளை செய்து முடிப்பீர்கள். எதிர்பார்த்த சில உதவிகள் கிடைக்கும். வெளியூர் தொடர்பான பணிகளில் சுபச்செய்திகள் கிடைக்கும். வாழ்க்கைத்துணையின் வழியில் ஆதாயம் ஏற்படும். வியாபாரத்தில் இருந்துவந்த போட்டிகள் குறையும்.





அதிர்ஷ்ட திசை : மேற்கு



அதிர்ஷ்ட எண் : 3



அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்





உத்திராடம் : மகிழ்ச்சியான நாள்.



திருவோணம் : சுபச்செய்திகள் கிடைக்கும்.



அவிட்டம் : போட்டிகள் குறையும்.

---------------------------------------







கும்பம்

செப்டம்பர் 04, 2021





சூழ்நிலைகளை அறிந்து அதற்கு தகுந்தாற்போல் செயல்படுவீர்கள். கடன் தொடர்பான பிரச்சனைகள் கட்டுப்பாட்டுக்குள் வரும். உடனிருப்பவர்கள் பற்றிய புரிதல் உண்டாகும். வியாபார அபிவிருத்தி தொடர்பான சிந்தனைகள் அதிகரிக்கும். மற்றவர்கள் பற்றி கருத்துக்களை கூறும்போது சிந்தித்து செயல்படவும். வாகனப் பயணங்களின்போது நிதானம் வேண்டும்.





அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு



அதிர்ஷ்ட எண் : 1



அதிர்ஷ்ட நிறம் : பொன் நிறம்





அவிட்டம் :  பிரச்சனைகள் குறையும்.



சதயம் : அபிவிருத்தியான நாள்.



பூரட்டாதி : நிதானம் வேண்டும்.

---------------------------------------







மீனம்

செப்டம்பர் 04, 2021





செய்ய நினைத்த பணிகளில் இருந்துவந்த தடைகளை அறிந்து அதற்கு தகுந்தாற்போல் காரியங்களை செய்து வெற்றி அடைவீர்கள். தாயாரின் உடல் ஆரோக்கியத்தில் இருந்துவந்த இன்னல்கள் குறையும். வியாபார பணிகளில் புதிய கூட்டாளிகளை இணைப்பது தொடர்பான சிந்தனைகள் மேம்படும். உத்தியோக பணிகளில் மறைமுகமாக இருந்துவந்த எதிர்ப்புகளை அறிவீர்கள். மகிழ்ச்சியான பழைய நினைவுகள் அவ்வப்போது ஏற்பட்டு நீங்கும்





அதிர்ஷ்ட திசை : வடக்கு



அதிர்ஷ்ட எண் : 2



அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்





பூரட்டாதி : வெற்றிகரமான நாள்.



உத்திரட்டாதி : இன்னல்கள் குறையும்.



ரேவதி : எதிர்ப்புகளை அறிவீர்கள்.

No comments:

Post a Comment

Post Top Ad