உள்ளாட்சித் தேர்தல்: முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் நாளை ஆலோசனை! - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Saturday, September 4, 2021

உள்ளாட்சித் தேர்தல்: முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் நாளை ஆலோசனை!

உள்ளாட்சித் தேர்தல்: முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் நாளை ஆலோசனை!

உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ள 9 மாவட்டங்களின் தி.மு.க., நிர்வாகிகளுடன், அக்கட்சித் தலைவரும், தமிழக முதலமைச்சருமான மு.க. ஸ்டாலின், நாளை ஆலோசனை மேற்கொள்ள உள்ளார்.

தமிழகத்தில் புதிதாக பிரிக்கப்பட்ட ஒன்பது மாவட்டகளுக்கு ஊரக உள்ளாட்சித் தேர்தலை வரும் 15ம் தேதிக்குள் நடத்த உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. தேர்தலை நடத்த கால அவகாசம் வழங்கக் கோரி தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளது.

அதே நேரத்தில் உள்ளாட்சித் தேர்தலுக்கான பணிகளையும் ஒரு பக்கம் செய்து வருகிறது. சமீபத்தில் வாக்காளர் வரைவு பட்டியலை மாநில தேர்தல் ஆணையம் வெளியிட்டது. மேலும் உள்ளாட்சி தேர்தல் தொடர்பாக நாளை மறுநாள் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியினருடன் ஆலோசனை மேற்கொள்ள உள்ளது.

இந்நிலையில், ஊரக உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ள 9 மாவட்ட தி.மு.க., நிர்வாகிகள், மாவட்ட செயலாளர், ஒன்றிய செயலாளர்கள், சட்டமன்ற மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களுடன், தி.மு.க., தலைவரும், முதலமைச்சருமான மு.க. ஸ்டாலின் நாளை காலை 11 மணிக்கு ஆலோசனையில் ஈடுபட உள்ளார். இந்த ஆலோசனைக் கூட்டம் சென்னை அண்ணா அறிவாலயத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை பின்பற்றி நடைபெறும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.

No comments:

Post a Comment

Post Top Ad