ரூ.1,000 உதவித்தொகை; நல்லா ஏமாற்றும் திமுக அரசு - அதிமுக பகீர்! - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Sunday, September 12, 2021

ரூ.1,000 உதவித்தொகை; நல்லா ஏமாற்றும் திமுக அரசு - அதிமுக பகீர்!

ரூ.1,000 உதவித்தொகை; நல்லா ஏமாற்றும் திமுக அரசு - அதிமுக பகீர்!

தமிழக சட்டமன்ற தேர்தலுக்கு முன்பாக திமுக வெளியிட்ட தேர்தல் அறிக்கையில்,
இல்லத்தரசிகளுக்கு மாதந்தோறும் ஆயிரம் ரூபாய் உரிமைத் தொகை வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்த சூழலில் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக ஆட்சிப் பொறுப்பேற்று நான்கு மாதங்களைக் கடந்துவிட்டது. ஆனால் இல்லத்தரசிகளுக்கான ஆயிரம் ரூபாய் திட்டம் இன்னும் செயல்படுத்தப்பட வில்லை. இதனைக் கண்டித்து எதிர்க்கட்சிகள் கடும் விமர்சனங்களை முன்வைத்து வருகின்றன.

அர்ச்சகர்களுக்கு உதவித்தொகை

இந்நிலையில் அதிமுகவின் அதிகாரப்பூர்வ நாளேடான “நமது அம்மா”வில், இல்லத்தரசிகளுக்கு மாதந்தோறும் ஆயிரம் ரூபாய் உரிமைத் தொகை வழங்குவோம் என்று தேர்தல் வாக்குறுதி தந்துவிட்டு, அதனை நிறைவேற்றாமல் இப்போது அர்ச்சகர்களுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் உதவித்தொகை வழங்கும் திட்டத்தை தொடங்கி வைத்திருக்கிறார் முதல்வர் மு.க.ஸ்டாலின். இதுதான் சொல்வது ஒன்று. செய்வது வேறொன்று என்பதோ? என்று கேள்வி எழுப்பியிருக்கிறது. மேலும், நீட் நுழைவுத் தேர்விற்கு விலக்கு என்பது நீர்த்துப் போய் விட்டது

திசை திருப்பும் திமுக

ஏழு பேர் விடுதலை கானல் நீராகி விட்டது. டீசல் விலை குறைப்பு என்பதெல்லாம் வாக்குறுதி சுரைக்காயாகி விட்டது. இவ்வாறு திமுக தாங்கள் அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றுவதற்கு மாறாக முன் வைக்காத வாக்குறுதிகளை தொடங்கி வைப்பதன் மூலம் பருப்பு இல்லை என்கிற குறையை நெய் இருக்கிறது என்று சொல்லி மக்களின் கவனத்தை மடைமாற்றம் செய்யும் காரியத்தை தான்
திமுக அரசு செய்து வருகிறது என்ற ு குற்றம்சாட்டப் பட்டுள்ளது. ஒருபக்கம் அனைவரும் அர்ச்சகராகலாம் என்று அறிவித்துவிட்டு

தமிழக மக்களை ஏமாற்றும் முயற்சி

மறுபுறம் ஆன்மீக நம்பிக்கை கொண்ட மக்களின் கோபத்திற்கு ஆளாகி நிற்கிறது. இப்போது அர்ச்சகர்களை சாந்தப்படுத்த மாதம் ஆயிரம் ரூபாய் உதவித்தொகை திட்டத்தை தொடங்கியிருக்கிறது. இல்லத்தரசிகளுக்கு மாதந்தோறும் ஆயிரம் ரூபாய் உதவித்தொகை என்பதை ஒப்பிடும் போது, அர்ச்சகர்களுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் என்பது குறைவான எண்ணிக்கையில் அர்ச்சகர்களை கொண்டு தங்களின் தேர்தல் வாக்குறுதி மோசடியை வேறுபக்கம் திசை திருப்பும் காரியமே ஆகும்.

No comments:

Post a Comment

Post Top Ad