நகைக்கடன் தள்ளுபடி; முதல்வர் ஸ்டாலினின் ஜாக்பாட் அறிவிப்பு! - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Sunday, September 12, 2021

நகைக்கடன் தள்ளுபடி; முதல்வர் ஸ்டாலினின் ஜாக்பாட் அறிவிப்பு!

நகைக்கடன் தள்ளுபடி; முதல்வர் ஸ்டாலினின் ஜாக்பாட் அறிவிப்பு!

தமிழகத்தில் கூட்டுறவுத் துறையின் கீழ் செயல்படும் கூட்டுறவு வங்கிகள், தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கங்கள் ஆகியவை பணம் மற்றும் நகைக்கு மிகவும் பாதுகாப்பான சேவையை அளித்து வருகின்றன. அதுமட்டுமின்றி குறைந்த வட்டியில் கடன் வழங்குவதால் கிராமப்புற, நகர்ப்புற மக்கள், மகளிர் சுய உதவிக்குழுவினர் உள்ளிட்டோர் பெரிய அளவில் பயனடைந்து வருகின்றனர். இந்த சூழலில் தமிழக சட்டமன்ற தேர்தலுக்கு முன்பாக திமுக வெளியிட்ட தேர்தல் அறிக்கையில், 5 சவரனுக்கு உட்பட்ட நகைக்கடன்கள் தள்ளுபடி செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.


அறிவிப்பு எப்போது?

இது கடன் வாங்கிய மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. இதையடுத்து சட்டமன்ற தேர்தலில் அமோக வெற்றி பெற்று மு.க.ஸ்டாலின் முதல்முறை முதல்வராக பதவியேற்றுக் கொண்டார். ஒருபுறம் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளில் கவனம் செலுத்திக் கொண்டே, மறுபுறம் மக்கள் நலத்திட்ட அறிவிப்புகளையும் வெளியிட்டு வருகிறார். குறிப்பாக பல்வேறு தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றி கொண்டிருக்கிறார். கூட்டுறவு வங்கிகளில் நகைக்கடன் வாங்கியவர்கள் தங்களது கடன் தள்ளுபடி தொடர்பான அறிவிப்பு வெளியாகும் என்று மிகவும் ஆர்வத்துடன் காத்துக் கொண்டிருக்கின்றனர்.

விவரங்கள் சேகரிப்பு

சமீபத்தில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் செஞ்சி மஸ்தான், கூட்டுறவு வங்கிகளில் வாங்கப்பட்ட கடன் தள்ளுபடி குறித்து இன்னும் மூன்று அல்லது நான்கு நாட்களில் முதல்வர் அறிவிப்பார் என்று கூறினார். இதற்கிடையில் கூட்டுறவு வங்கிகளில் 5 சவரன் வரி நகைக்கடன் பெற்றவர்களின் விவரங்களை கூட்டுறவுத்துறை சேகரித்துள்ளது. அதில் 61 லட்சம் பேர் சுமார் 17 ஆயிரம் கோடி ரூபாய் அளவிற்கு கடன் பெற்றுள்ளதாக தெரியவந்துள்ளது. தமிழகத்தில் விரைவில்
உள்ளாட்சி தேர்தல் நடைபெறவுள்ளது.

இன்னும் ஒரேநாள் தான்

முதலில் 9 மாவட்டங்களின் ஊரக உள்ளாட்சி பகுதிகளுக்கும், பின்னர் அனைத்து மாவட்டங்களில் நகர்ப்புற உள்ளாட்சி பகுதிகளுக்கும் தேர்தல் நடைபெறும். அதற்கு முன்னதாக நகைக்கடன் தள்ளுபடி அறிவிப்பை வெளியிட்டால், அது தங்களுக்கு சாதகமாக இருக்கும் என்று திமுக தரப்பில் நம்பப்படுகிறது. தற்போது தமிழக சட்டமன்றத்தில் பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. உள்ளாட்சி தேர்தல் குறித்த அறிவிப்பு அடுத்த சில நாட்களில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுவதால் அதற்கு முன்னதாக
சட்டமன்ற கூட்டத்தொடர் முடிவுக்கு வருகிறது.

No comments:

Post a Comment

Post Top Ad