இன்று மட்டும் 20 லட்சம் பேருக்கு; தமிழக மக்கள் ரெடியா இருக்கீங்களா? - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Sunday, September 12, 2021

இன்று மட்டும் 20 லட்சம் பேருக்கு; தமிழக மக்கள் ரெடியா இருக்கீங்களா?

இன்று மட்டும் 20 லட்சம் பேருக்கு; தமிழக மக்கள் ரெடியா இருக்கீங்களா?

தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்தும் வகையில் மாநில அரசு பல்வேறு நடவடிக்கைகளை முடுக்கி விட்டுள்ளது. இரண்டாவது அலை ஏராளமான உயிர்களை கொத்து, கொத்தாக பலிவாங்கியதால் பெரும் அச்சம் ஏற்பட்டது. இதையடுத்து தடுப்பூசி ஒன்றே தீர்வு என அரசும், மக்களும் நகரத் தொடங்கினர். தமிழகத்தில் தினசரி தொற்று தற்போது 1,700க்கும் கீழ் குறைந்துள்ளது. ஒருசில மாவட்டங்களில் ஏற்படும் புதிய பாதிப்புகள் ஒட்டுமொத்த எண்ணிக்கையில் ஏற்ற, இறக்கங்களை உண்டாக்கி வருகிறது. இருப்பினும் இரண்டாவது அலை பெரிதும் கட்டுக்குள் வந்திருப்பதாக நம்பப்படுகிறது.

தமிழக அரசு மெகா ஏற்பாடு

அதேசமயம் விரைவில் மூன்றாவது அலை ஏற்படுவதற்கான எச்சரிக்கை விடப்பட்டிருப்பதால், அதற்கு தயாராக வேண்டியது அவசியமாகிறது. அந்த வகையில் அதிக அளவில் தடுப்பூசி முகாம்களை நடத்த மு.க.ஸ்டாலின் தலைமையிலான தமிழக அரசு மேற்கொண்டு வருகிறது. அதன்படி, இன்றைய தினம் (செப்டம்பர் 12) 40 ஆயிரம் சிறப்பு முகாம்களை நடத்தி, அதன்மூலம் 18 வயதுக்கு மேற்பட்ட 20 லட்சம் பேருக்கு தடுப்பூசி போட திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கான ஏற்பாடுகளை மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் செய்துள்ளார்.

சிறப்பு தடுப்பூசி முகாம்கள்

அதாவது, ஆரம்ப சுகாதார நிலையங்கள், அரசு மருத்துவமனைகள், அங்கன்வாடி மையங்கள், பள்ளிகள் மற்றும் முக்கிய இடங்களில் தடுப்பூசி போடப்பட உள்ளது. இந்நிலையில் தடுப்பூசி முகாம் குறித்த வழிகாட்டு நெறிமுறைகளை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. அவை, மூன்றாவது அலையை தவிர்ப்பதற்காக, கொரோனா நோயில் இருந்து விடுபடவும், கொரோனாவில் இருந்து பாதுகாப்பு பெறவும் சிறப்பு முகாம் நடைபெறுகிறது. கொரோனா தடுப்பூசி மையங்கள் காலை 7 மணி முதல் இரவு 7 மணி வரை செயல்படும்.

No comments:

Post a Comment

Post Top Ad