கொரோனா பாதிப்பா? தமிழகப் பள்ளிகளுக்கு புதிய உத்தரவு; அரசு அதிரடி! - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Sunday, September 12, 2021

கொரோனா பாதிப்பா? தமிழகப் பள்ளிகளுக்கு புதிய உத்தரவு; அரசு அதிரடி!

கொரோனா பாதிப்பா? தமிழகப் பள்ளிகளுக்கு புதிய உத்தரவு; அரசு அதிரடி!

தமிழகத்தில்
கொரோனா வைரஸ் பரவலின் இரண்டாவது அலை பெரிதும் தணிந்திருக்கிறது. தினசரி தொற்று கடந்த மே 21ஆம் தேதி 21 ஆயிரத்தை தாண்டி மிகப்பெரிய உச்சம் தொட்டது. அதன்பிறகு படிப்படியாக நோய்ப்பரவல் குறைந்து வருகிறது. கடந்த சில வாரங்களாக கோவிட்-19 பாதிப்பு 1,600க்கும் கீழ் சரிந்துள்ளது. அதேசமயம் சில மாவட்டங்களில் ஏற்ற இறக்கங்களுடன் பதிவாகி வரும் வைரஸ் தொற்றால் ஒட்டுமொத்த எண்ணிக்கை சற்றே ஏற்றம் அடைந்துள்ளது. நேற்று புதிதாக 1,639 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. 1,517 பேர் குணமடைந்து வீடு திரும்பிவிட்டனர்.

பள்ளிகள் திறக்க உத்தரவு

கொரோனா பாதிப்பு குறைந்து வருவதைக் கருத்தில் கொண்டு, கடந்த செப்டம்பர் ஒன்றாம் தேதி முதல் பள்ளிகள், கல்லூரிகளை திறக்க முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவு பிறப்பித்தார். 9-12ஆம் வகுப்பு மாணவர்கள், இளங்கலை மற்றும் முதுகலை இறுதியாண்டு படிக்கும் மாணவர்கள் மட்டும் வரவழைக்கப் பட்டுள்ளனர். அனைத்து கல்வி நிலையங்களிலும் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் உரிய முறையில் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இந்த சூழலில் சில பள்ளிகளில் ஆசிரியர்கள், மாணவர்கள் கொரோனா பாதிப்பிற்கு ஆளாகி வருவதைக் காண முடிகிறது.


மாணவர்கள், ஆசிரியர்களுக்கு கொரோனா

உடனே அவர்கள் தனிமைப்படுத்தப்பட்டு மருத்துவக் கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனர். இதுவரை 15க்கும் மேற்பட்ட மாணவர்கள், 10க்கும் மேற்பட்ட ஆசிரியர்களுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. சம்பந்தப்பட்ட பள்ளிகள் மூடப்பட்டு கிருமி நாசினி கொண்டு சுத்தப்படுத்தப்பட்டு வருகின்றன. முன்னதாக மூன்றாவது அலை எச்சரிக்கை, 18 வயதுக்கு கீழ் உள்ளவர்களுக்கு தடுப்பூசி இல்லாமை ஆகிய காரணங்களை சுட்டிக் காட்டி பள்ளிகள் திறப்பை ஒத்திவைக்க வேண்டும் என்று மாநில அரசுக்கு பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்திருந்தனர்

பள்ளிக் கல்வித்துறை புதிய உத்தரவு

இந்த சூழலில் பள்ளிகள் திறப்பால் தான் மாணவர்கள், ஆசிரியர்களுக்கு நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டு வருவதாக குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளனர். ஆனால் பள்ளிகள் திறப்பால் தான் நோய்த்தொற்று ஏற்பட்டது என்று சொல்வது தவறு. ஏனெனில் அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் சரியான முறையில் பின்பற்றப்பட்டு வருவதாக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் விளக்கம் அளித்திருந்தார்.இந்நிலையில் செப்டம்பர் ஒன்று முதல் 6ஆம் தேதி வரையிலான காலகட்டத்தில் பள்ளிகளில் கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்ட மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் பணியாளர்களின் விவரங்களை பள்ளிக் கல்வி இணை இயக்குநர் மின்னஞ்சல் முகவரிக்கு பள்ளி தலைமை ஆசிரியர்கள் அனுப்பி வைக்க வேண்டும் என்று பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. இதுதொடர்பான உத்தரவை பள்ளிக் கல்வித்துறை இணை இயக்குநர் பிறப்பித்துள்ளார்.

No comments:

Post a Comment

Post Top Ad