தமிழகத்திற்கு 28 டி.எம்.சி., நீரை உடனடியாக வழங்குக! - கர்நாடகாவுக்கு அதிரடி உத்தரவு!
செப்டம்பர் மாதம் வரை தமிழகத்திற்கு தர வேண்டிய காவிரி நிலுவை நீரை உடனடியாக வழங்க கர்நாடக மாநிலத்திற்கு காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவிட்டு உள்ளது.
தலைநகர் டெல்லியில், காவிரி மேலாண்மை ஆணையத்தின் 14 ஆவது கூட்டம், மத்திய நீர்வள அமைச்சகத்தின் சேவா பவனில் இன்று நடைபெற்றது. காவிரி மேலாண்மை ஆணைய தலைவர் ஹல்தர் தலைமையில்
நடைபெறும் கூட்டத்தில் தமிழகம், கர்நாடகா உள்ளிட்ட 4 மாநில அதிகாரிகள் பங்கேற்றனர். தமிழகததின் சார்பில் பொதுப்பணித் துறை செயலாளர் சந்தீப் சக்சேனா, காவிரி தொழில்நுட்ப பிரிவு தலைவர் சுப்பிரமணியன் உள்ளிட்ட அதிகாரிகள் பங்கேற்றனர்.
கொரோனா தொற்று அச்சம் காரணமாக, ஓராண்டாக 'வீடியோ கான்பரன்ஸ்' மூலம் பங்கேற்ற அதிகாரிகள், இன்றைய கூட்டத்தில் நேரடியாக பங்கேற்றனர். இதேபோல பிற மாநிலங்கள் சார்பிலும் பிரதிநிதிகள் பங்கேற்றனர்.
இந்த கூட்டத்தில் உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி காவிரி நீரை கர்நாடக அரசு முறையாக வழங்கவில்லை என தமிழக அரசு குற்றம் சாட்டியது. செப்டம்பர் மாதம் 23 ஆம் தேதி வரை 37.3 டி.எம்.சி., காவிரி நீர் இன்னும் வழங்கப்படாமல் நிலுவையில் உள்ளது.
காவிரி நதிநீர் மேலாண்மை ஆணையம் உத்தரவு பிறப்பித்தும் கர்நாடக அரசு செயல்படுத்தவில்லை. கர்நாடக மாநிலத்தில் அதிகளவில் மழை பெய்து வரும் நிலையில் காவிரியில் நீர் திறக்கப்படவில்லை.
No comments:
Post a Comment