அரசு பணியில் பெண்களுக்கு 30% மட்டுமே: TNPSC அறிவுரையால் குழப்பம் - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Thursday, September 23, 2021

அரசு பணியில் பெண்களுக்கு 30% மட்டுமே: TNPSC அறிவுரையால் குழப்பம்

அரசு பணியில் பெண்களுக்கு 30% மட்டுமே: TNPSC அறிவுரையால் குழப்பம்

தமிழக சட்டசபையில் மனித வள மேலாண்மை துறை 2021-2022 ஆம் ஆண்டிற்கான அறிவிப்புகளை அமைச்சர் நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் அண்மையில் வெளியிட்டார். அப்போது ''தமிழக அரசுத் துறைகளில் உள்ள பணியிடங்கள் மற்றும் மாநில பொதுத்துறை நிறுவனங்களில் உள்ள பணி இடங்கள் அனைத்திலும் தமிழ் இளைஞர்களை 100% நியமனம் செய்யும் பொருட்டு தேர்வுகள் நடத்தப்படும் அனைத்து போட்டித் தேர்வுகளிலும் தமிழ் மொழி பாடல் தகுதி தேர்வு கட்டாயமாக்கப்படும்.
அரசு பணி நியமனங்களில் பெண்களுக்கான ஒதுக்கீட்டினை 30 சதவீதத்திலிருந்து 40 சதவீதமாக உயர்த்தப்படும்.'' உள்ளிட்ட அறிவிப்புகள் இடம்பெற்றிருந்தன.

இந்த நிலையில் தற்போது TNPSC வெளியிட்டுள்ள அறிவுரைகளில் பெண்களுக்கான ஒதுக்கீடு 30% என்றே குறிப்பிடப்பட்டிருப்பது குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. அதுகுறித்த அறிவிப்பில் கூறப்பட்டுள்ளதாவது, மொத்தம் கணக்கிடப்பட்டுள்ள காலிப்பணியிடங்களில் இட ஒதுக்கீடு விதி பொருந்தும் பதவிகளாக இருந்தாலும், இல்லாவிட்டாலும் குறைந்த பட்சம் 30% பெண் விண்ணப்பதாரர்களுக்கு இட ஒதுக்கீடு செய்யப்படுகிறது.

இட ஒதுக்கீடு விதி பொருந்தும் பதவிகளை பொறுத்தவரை ஒவ்வொரு பிரிவு மற்றும் பொதுப்பிரிவில் இட ஒதுக்கீட்டின் படி, 30% காலிப்பணியிடங்கள் பெண் விண்ணப்பதாரர்களுக்கு இட ஒதுக்கீடு செய்யப்படுகிறது. பெண்கள்/ மூன்றாம் பாலின (பெண்கள்) விண்ணப்பதாரர் மேற்குறிப்பிட்ட 30% இட ஒதுக்கீட்டில் போட்டியிட தகுதியானவர்.

மேலும், அவர்கள் மீதமுள்ள 70% காலிப்பணியிடங்களுக்கான இட ஒதுக்கீட்டில் ஆண்கள் / முன்றாம் பாலினத்தவர்கள் / மூன்றாம் பாலின (ஆண்கள்) விண்ணப்பதாரருடன் சேர்ட்னது போட்டியிட தகுதியானவர்கள்'' என இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது

No comments:

Post a Comment

Post Top Ad