பேருந்து ஆற்றில் கவிழ்ந்து விபத்து...6 பேர் உயிரிழப்பு - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Thursday, September 30, 2021

பேருந்து ஆற்றில் கவிழ்ந்து விபத்து...6 பேர் உயிரிழப்பு

பேருந்து ஆற்றில் கவிழ்ந்து விபத்து...6 பேர் உயிரிழப்பு


மேகாலயா மாநிலம் துரா என்ற ஊரிலிருந்து ஷில்லாங் என்ற பகுதிக்கு பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது.

அப்பேருந்தில் சுமார் 21 பயணிகள் இருந்தனர். மேற்கு காசி மலைப்பகுதி மாவட்ட எல்லை அருகே பேருந்து வந்தபோது அதிகாலையில் ஓட்டுநரில் கட்டுப்பாட்டை இழந்து நோங்ச்ராம் பாலத்தில் இருந்து ரிங்டி ஆற்றில் விழுந்தது.இந்தச் சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மேலும், இந்த விபத்து குறித்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்புத்துறையினர் படுகாயம் அடைந்தவர்களை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுவரை 6 பேர் உயிரிழந்துள்ளதாகத் தகவல் வெளியாகிறது.

No comments:

Post a Comment

Post Top Ad