சென்னை டூ லண்டன்; 8 மாதங்களுக்கு பிறகு சர்ப்ரைஸ் அறிவிப்பு!
இந்தியாவில் கொரோனா முதல் அலை கடந்த ஆண்டு மார்ச் மாதம் தொடங்கியது. இதையடுத்து மார்ச் 25ஆம் தேதி முதல் வெளிநாட்டு விமானங்கள் இந்தியா வருவதற்கு தடை விதிக்கப்பட்டது. அப்போது லண்டன் - சென்னை இடையிலான அனைத்து விமான சேவைகளையும் பிரிட்டிஷ் ஏர்வேஸ் நிறுத்தியது. பின்னர் கொரோனா பாதிப்புகள் குறையத் தொடங்கியதை அடுத்து, கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் இந்தியா உடனான பிரிட்டிஷ் ஏர்வேஸ் விமான சேவை மீண்டும் தொடங்கியது.
வாரத்தில் மூன்று சிறப்பு விமானங்கள் மட்டும் இயக்கப்பட்டு வந்தன.
மீண்டும் விமான சேவை
இந்த சூழலில் கடந்த ஆண்டு டிசம்பர் மாத இறுதியில் இரண்டாவது அலை தொடங்கியது. இதனால் அச்சம் ஏற்பட்டு மீண்டும் விமான சேவைகள் நிறுத்தப்பட்டன. தற்போது கொரோனா இரண்டாவது அலையின் தாக்கம் பெரிதும் தணிந்திருக்கிறது. இதனைக் கருத்தில் கொண்டு பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. அந்த வரிசையில் பிரிட்டிஷ் ஏர்வேஸ் நிறுவனம் தங்களது நேரடி விமான சேவையை தொடங்கியது. ஆனால் இந்த சேவை டெல்லி, மும்பை, பெங்களூரு ஆகிய நகரங்களுக்கு மட்டுமே கிடைத்தது. சென்னைக்கு நேரடி விமானங்கள் இயக்கப்படவில்லை.
சென்னை வந்து சேர்ந்தது
இதன் காரணமாக லண்டன் செல்ல வேண்டிய தமிழர்கள், டெல்லி, மும்ப
ை மற்றும் பெங்களூரு சென்று அங்கிருந்து லண்டன் செல்ல வேண்டிய நிலை இருந்தது. இந்த சூழலில் லண்டனில் இருந்து சென்னைக்கு நேரடி விமான சேவை 8 மாதங்களுக்கு பின்னர் இன்று (ஆகஸ்ட் 1) மீண்டும் தொடங்கியுள்ளது. லண்டனில் இருந்து புறப்பட்ட பிரிட்டிஷ் ஏர்வேஸ் விமானத்தில் 189 பயணிகள், 14 விமான ஊழியர்களுடன் இன்று அதிகாலை 4 மணிக்கு சென்னை சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்தது. இதில் வந்த பயணிகளுக்கு சென்னை விமான நிலையத்தில் உடல் வெப்பநிலை பரிசோதனை நடத்தப்பட்டது.
No comments:
Post a Comment