மலையாளத்தை தொடர்ந்து தெலுங்கில் ரவுண்டு கட்டும் மு.க.ஸ்டாலின்! - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Wednesday, September 1, 2021

மலையாளத்தை தொடர்ந்து தெலுங்கில் ரவுண்டு கட்டும் மு.க.ஸ்டாலின்!

மலையாளத்தை தொடர்ந்து தெலுங்கில் ரவுண்டு கட்டும் மு.க.ஸ்டாலின்!

முதல்வராக பொறுப்பேற்றது முதல் தமிழக முதல்வர் ஸ்டாலினின் நடவடிக்கைகளை பொது மக்கள் பலரும் பாராட்டி வந்ததற்கிடையே சட்டப்பேரவையில் அதிமுக உறுப்பினர்களே பாராட்டியது அனைவரது கவனத்தையும் ஈர்த்தது. தொடர்ந்து, தற்போது அண்டை மாநிலங்களிலும் அவருக்கு வரவேற்பு அதிகரித்துள்ளது.

அந்த வகையில், சில தினங்களுக்கு முன்னர் கேரளாவில் ஸ்டாலின் ட்ரெண்டானார். அம்மாநில ஊடகம் ஒன்றில் நடைபெற்ற விவாதத்தில் கலந்து கொண்ட அம்மாநில எதிர்க்கட்சியான காங்கிரஸ் எம்.எல்.ஏ. விஷ்னுநாத், மூன்று மாதங்களில் என்னவெல்லாம் மக்களுக்கு செய்ய முடியும் என நிரூபித்தவர் ஸ்டாலின் என தமிழக முதல்வர் ஸ்டாலினை புகழ்ந்து பேசும் வீடியோ வைரலானது.

இதையடுத்து, ஜனசேனா தலைவரும் தெலுங்கு நடிகருமான பவன் கல்யான் தெலுங்கு, தமிழ் என இரு மொழிகளிலும் ஸ்டாலினை புகழ்ந்து ஒரு அறிக்கையை வெளியிட்டார். அதில், ஆட்சிக்கு வந்த பிறகு அரசியல் செய்யக் கூடாது என்பதை நிரூபித்து வருபவர் ஸ்டாலின். உங்களது ஆட்சி நிர்வாகம், உங்கள் அரசின் செயல்பாடுகள், உங்கள் மாநிலத்திற்கு மட்டுமல்ல, நாட்டில் உள்ள அனைத்து மாநிலங்களுக்கும், அனைத்து அரசியல் கட்சிகளுக்கும் ஊக்கமளிக்கும் விதத்தில் உள்ளது என்று புகழாரம் சூடியிருந்தார்.

அதன் தொடர்ச்சியாக, தற்போது தெலுங்கு நடிகரான மெகா ஸ்டார் சிரஞ்சீவி முதல்வர் ஸ்டாலினை அவரது இல்லத்தில் சந்தித்து பேசியுள்ளார். அப்போது தமிழக அரசின் நடவடிக்கைகளையும், ஸ்டாலினின் அணுகுமுறைகளையும் அவர் பாராட்டியதாக தெரிகிறது. இந்த சந்திப்பின் போது, உதயநிதி ஸ்டாலினும் உடனிருந்தார்

No comments:

Post a Comment

Post Top Ad