9-12 வகுப்பு மாணவர்களுக்கு புதிய அறிவிப்பு; பள்ளிக் கல்வித்துறை சிறப்பு ஏற்பாடு! - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Thursday, September 9, 2021

9-12 வகுப்பு மாணவர்களுக்கு புதிய அறிவிப்பு; பள்ளிக் கல்வித்துறை சிறப்பு ஏற்பாடு!

9-12 வகுப்பு மாணவர்களுக்கு புதிய அறிவிப்பு; பள்ளிக் கல்வித்துறை சிறப்பு ஏற்பாடு!

தமிழகத்தில்

கொரோனா வைரஸ் பாதிப்பு பல்வேறு அலைகளாக தாக்கியது. தற்போது இரண்டாம் அலை இறுதிக் கட்டத்தை எட்டியிருப்பதாக நம்பப்படுகிறது. ஏனெனில் தினசரி தொற்று படிப்படியாக குறைந்து 1,600க்கும் கீழ் சரிந்துள்ளது. நேற்றைய தினம் புதிதாக 1,587 பேருக்கு நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 1,594 பேர் குணமாகி வீடு திரும்பிவிட்டனர். 18 பேர் பலியாகியுள்ளனர். 16,180 பேர் கொரோனா நோயாளிகளாக சிகிச்சை பெற்று வருகின்றனர். சில மாவட்டங்களில் நோய்த்தொற்றின் தாக்கம் அதிகமாக இருப்பதால் மாநிலத்தின் மொத்த பாதிப்பு ஏற்ற, இறக்கங்களை சந்தித்து வருகிறது. கொரோனா தொற்று பரவல் பெரிதும் குறைந்திருப்பதால் உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுடன் கடந்த ஒன்றாம் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்பட்டன.

புத்தாக்கப் பயிற்சிகள்


முதல்கட்டமாக 9, 10, 11, 12 ஆகிய வகுப்பு மாணவர்கள் மட்டும் வரவழைக்கப்பட்டு நேரடி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. ஓராண்டிற்கும் மேலாக மாணவர்கள் தங்கள் வீடுகளிலேயே முடங்கியிருந்ததால் மன அழுத்தத்திற்கு ஆளாகியிருக்கக் கூடும். எனவே 45 நாட்களுக்கு புத்துணர்வு வகுப்புகள் நடத்தி பள்ளிச் சூழலுக்கு ஏற்ப தயார்படுத்த வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்த சூழலில் அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் பள்ளிக் கல்வி ஆணையர் நந்தகுமார் முக்கிய சுற்றறிக்கை ஒன்றை அனுப்பியுள்ளது. அதில், கொரோனா பெருந்தொற்று காரணமாக பள்ளிகள் நீண்ட காலமாக மூடப்பட்டிருந்தன.

முதன்மைச் செயலாளர் அறிவுறுத்தல்

இதனால் மாணவர்களுக்கு ஏற்பட்ட கற்றல் இழப்பை சரி செய்யும் வகையில் பள்ளிக் கல்வித்துறை முதன்மைச் செயலாளர் காகர்லா உஷா அறிவுறுத்தலின்படி

புத்தாக்கப் பயிற்சி வழங்கப்பட வேண்டும். இதையொட்டி 2-12ஆம் வகுப்பு வரை முந்தைய வகுப்புக்கான அடிப்படை மற்றும் முக்கியப் பாடக் கருத்துகளை தெரிந்து கொள்ளும் வகையில் மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் பயிற்சி பாடத்தை தயாரித்துள்ளது. இவை மின்னணு முறையில் அனைத்து முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு அனுப்பப்பட்டு, அவர்கள் மூலம் பள்ளிகளுக்கு அனுப்பப்பட்டது.

No comments:

Post a Comment

Post Top Ad