ஊரக உள்ளாட்சித் தேர்தலை ஒரே கட்டமாக நடத்த வேண்டும்: எடப்பாடி பழனிசாமி கடிதம்! - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Wednesday, September 15, 2021

ஊரக உள்ளாட்சித் தேர்தலை ஒரே கட்டமாக நடத்த வேண்டும்: எடப்பாடி பழனிசாமி கடிதம்!

ஊரக உள்ளாட்சித் தேர்தலை ஒரே கட்டமாக நடத்த வேண்டும்: எடப்பாடி பழனிசாமி கடிதம்!

தமிழகத்தில் விடுபட்ட நெல்லை தென்காசி, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை ஆகிய 9 மாவட்ட ஊரக உள்ளாட்சிகளுக்கு அக்டோபர் 6, 9 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டங்களாக தேர்தல் நடைபெறவுள்ளது. இதற்கான அறிவிப்பை அறிவிப்பை மாநில
தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது.

காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறும். வாக்கு எண்ணிக்கை அக்டோபர் 12ஆம் தேதி நடைபெற்று அன்றைய தினமே முடிவுகள் அறிவிக்கப்படும் என்றும், வெற்றி பெற்றவர்கள் அக்டோபர் 20ஆம் தேதி பதவியேற்பார்கள் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

ஊரக உள்ளாட்சித் தேர்தலுக்கான வேட்புமனுத்தாக்கல் வருகிற 15ஆம் தேதி நடைபெறவுள்ளது. 22ஆம் தேதி வேட்புமனுத்தாக்கல் நிறைவு பெறுகிறது. அதன் மீதான பரீலனை 23ஆம் தேதி நடைபெறுகிறது. வேட்புமனுக்களை திரும்பப் பெறுவதற்கான கடைசி நாள் வருகிற 25ஆம் தேதி என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, கூட்டணி, விருப்பமனு வாங்குவது உள்ளிட்ட தேர்தலுக்கான பணிகளை அரசியல் கட்சிகள் மேற்கொண்டு வருகின்றன. கொரோனா காலகட்டத்தில் வாக்குச் சீட்டு அடிப்படையில், தேர்தல் நடைபெறவுள்ளதால் இது தேர்தல் ஆணையத்துக்கு மிகவும் சாவாலான ஒன்றாக இருக்கிறது.

இந்த நிலையில், ஊரக உள்ளாட்சித் தேர்தலை ஒரே கட்டமாக நடத்த வேண்டும் என்று அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக மாநில தேர்தல் ஆணையத்துக்கு அவர் எழுதியுள்ள கடிதத்தில், ஒரே கட்டமாக உள்ளாட்சித் தேர்தலை நடத்த வேண்டுமென்றும், தேர்தலின் போது ஆளுங்கட்சிக்கு ஆதரவாக செயல்படுவார்கள் என்பதால் தேர்தல் பாதுகாப்பு பணிக்கு மாநில போலீஸுக்கு பதில் சிஆர்பிஎப் வீரர்களை பயன்படுத்த வேண்டுமென்றும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளார்.

தேர்தல் பார்வையாளர்கள் உள்ளிட்டவர்களை மத்திய அரசுப் பணியாளர்களாகவோ அல்லது வேறு மாநிலத்தை சேர்ந்தவர்களாகவோ நியமிக்க வேண்டும் என்றும் அந்த கடிதத்தில் அவர் கேட்டுக் கொண்டுள்ளார். கடந்த சட்டமன்றத் தேர்தலே ஒரே கட்டமாக நடந்த நிலையில், சிறிய அளவிலான ஊரக உள்ளாட்சித் தேர்தலையும் ஒரே கட்டமாக நடத்த வேண்டும். இரண்டு கட்டங்களாக நடைபெற்றால், முறைகேடுகளுக்கும், சட்ட-ஒழுங்கு பிரச்சினைக்கு அது வழிவகுக்கும் என்றும் எடப்பாடி பழனிசாமி தனது கடிதத்தில் சுட்டிக்காட்டியுள்ளார்.

No comments:

Post a Comment

Post Top Ad