மாணவர்கள் விஷயத்தில் இப்படியா? பள்ளிகளுக்கு எதிராக ஷாக் உத்தரவு!
தமிழகத்தில்கொரோனா வைரஸ் பாதிப்பின் இரண்டாவது அலை படிப்படியாக குறைந்து கொண்டிருக்கிறது. விரைவில் நோய்த்தொற்று பரவல் முடிவுக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனைக் கருத்தில் கொண்டு செப்டம்பர் ஒன்றாம் தேதி முதல் 9, 10, 11, 12 ஆகிய வகுப்புகளுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டன. ஓராண்டிற்கும் மேலாக வீட்டிலேயே முடங்கிக் கிடந்ததால் பள்ளிச் சூழலுக்கு ஏற்ப தயாராகும் வகையில் 45 நாட்கள் புத்துணர்வு வகுப்புகளுக்கு நடவடிக்க
ை எடுக்கப்பட்டுள்ளது. பள்ளிகள் திறக்கப்பட்ட முதல் வாரத்திலேயே பல்வேறு பள்ளிகளில் மாணவர்கள், ஆசிரியர்கள் கோவிட்-19 தொற்றுக்கு ஆளாகியது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
மூன்றாவது அலை எச்சரிக்கை
இதைச் சுட்டிக் காட்டி குழந்தைகளுக்கான தடுப்பூசி இன்னும் பயன்பாட்டிற்கு வராத சூழலில் அவசரப்பட்டு பள்ளிகளை திறந்ததால் தான் இத்தகைய விளைவுகள் ஏற்பட்டுள்ளன. அடுத்ததாக மூன்றாவது அலை வரும் என்று எச்சரிக்கை விடப்பட்டுள்ள சூழலில் அரசு ஏன் அவசரம் காட்ட வேண்டும் என்று சிலர் கேள்விகளை முன்வைத்து வருகின்றனர். அடுத்தகட்டமாக 1 முதல் 8ஆம் வகுப்பு வரை பள்ளிகள் திறப்பது தொடர்பாக வரும் 30ஆம் தேதி அன்று விரிவான ஆலோசனை நடத்தப்படும்.
பொதுநல மனு தாக்கல்
அதன் அடிப்படையில் அடுத்தகட்ட
நடவடிக்கைகள் இருக்கும் என்று பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார். இந்நிலையில் 9 முதல் 12ஆம் வகுப்பு வரை பள்ளிகளுக்கு சென்று நேரடி வகுப்புகளில் பங்கேற்க தடை கோரி திருநெல்வேலியை சேர்ந்த அப்துல் வஹாபுதீன் உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் பொதுநல மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். அதில், 60க்கும் மேற்பட்ட மாணவர்கள், ஆசிரியர்கள் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
பள்ளிகள் மீது நடவடிக்கை
பல பள்ளிகளில் மாணவர்கள் நேரடி வகுப்புகளில் கட்டாயம் கலந்து கொள்ள வேண்டும் என்று கட்டாயப்படுத்துவதாக கூறப்பட்டிருந்தது. இந்த வழக்கை நீதிபதிகள் துரைசாமி, முரளிசங்கர் ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்தது. அப்போது, மாணவர்களை
வகுப்புகளுக்கு வர வேண்டும் என்று கட்டாயப்படுத்தும் பள்ளிகள் மீது அரசு நடவடிக்கை எடுக்கலாம்.
ஒருவேளை மாணவர்களை கட்டாயப்படுத்தும் பள்ளிகளின் விவரங்களை மனுதாரர் தெரிவித்தால் அந்த பள்ளிகள் மீது அரசு நடவடிக்கை எடுக்கும் என்று தெரிவித்தனர். இந்த வழக்கு குறித்து அரசின் முதன்மை செயலாளர், பள்ளிக் கல்வித்துறை செயலாளர் ஆகியோர் பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கு விசாரணையை வரும் 30ஆம் தேதிக்கு நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.
No comments:
Post a Comment