செவிலியர்களை போராட வைத்து அரசு வேடிக்கை பார்ப்பது வேதனையளிக்கிறது - டிடிவி - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Wednesday, September 29, 2021

செவிலியர்களை போராட வைத்து அரசு வேடிக்கை பார்ப்பது வேதனையளிக்கிறது - டிடிவி

செவிலியர்களை போராட வைத்து அரசு வேடிக்கை பார்ப்பது வேதனையளிக்கிறது - டிடிவி

பணி நிரந்தரம் செய்யக்கோரி சென்னை டி.எம்.எஸ் வளாகத்தில் செவிலியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். போராட்டத்தில் ஈடுபட்டு வரும் செவிலியர்களின் கோரிக்கையை தமிழக ஏற்று பேச்சு வார்த்தை நடத்த வேண்டும் என அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் வலியுறுத்தியுள்ளார்.
அதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் '' கொரோனா பெருந்தொற்று காலத்தில் தம் உயிரை பணயம் வைத்து மருத்துவ சேவையாற்றிய செவிலியர்களை போராட வைத்து தமிழக அரசு வேடிக்கை பார்ப்பது வேதனையளிக்கிறது. பணி நிரந்தரம் உள்ளிட்ட செவிலியர்களின் நியாயமான கோரிக்கைகளை அரசு நிறைவேற்றிட வேண்டும். முதலமைச்சரோ அல்லது மருத்துவத்துறை அமைச்சரோ போராட்டத்தில் ஈடுபட்டுள்ள செவிலியர்களை உடனடியாக அழைத்து பேசி அவர்களின் போராட்டத்தை முடிவுக்கு கொண்டுவர வேண்டும்'' என இவ்வாறு பதிவிட்டுள்ளார்.

முன்னதாக டி.எம்.எஸ் வளாகத்தில் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் செவிலியர்களை மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் நேரில் சந்தித்து ஆதரவு தெரிவித்தார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த கமல்ஹாசன் ''செவிலியர்களின் நியாயமான போராட்டத்தில் எங்கள் பங்களிப்பும் இருக்க வேண்டும் என்பதற்காக வந்திருக்கிறோம்.

கொரோனா தொற்றுக்கு எதிரான போராட்டம் முடிந்து விட்டதாக அரசு கருத வேண்டாம். இன்னும் நடந்து கொண்டு தான் இருக்கிறது. தொற்றின் எண்ணிக்கை வேண்டும் ஆனால் குறைந்துள்ளது.ஆதலால் செவிலியர்கள் பணி முடிந்து விட்டது போல் சிதறடிப்பது நியாயமில்லை இவர்களின் கோரிக்கை நியாயமானது இவர்களின் சேவை நமக்கு தேவை செவிலியர்களை பணியில் தக்க வைத்துக் கொள்வது நமது கடமை அரசுக்கு பரிந்துரைக்கவே வந்துள்ளேன்.

கொரோனா காலத்தில் செவிலியர்கள் சேவையின் பலனாக பலர் உயிர் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள் இன்னும் பலர் உயிருக்கு போராடிக் கொண்டிருக்கிறார்கள்.இந்த நேரத்தில் இவர்களின் பணி நமக்குத் தேவை. அரசு இவர்களின் போராட்டத்தை கவனமுடன் அணுகி கோரிக்கைகளை பூர்த்தி செய்ய வேண்டும் போராட்டத்தை ஒரு சமூகமாக முடிப்பதற்கான எல்லா ஏற்பாடுகளையும் செய்ய வேண்டும் என கூறினார்.

No comments:

Post a Comment

Post Top Ad