மாணவர்கள் பள்ளிக்கு வர தேவையில்லை: அமைச்சர் அன்பில் மகேஷ் தகவல்! - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Monday, September 27, 2021

மாணவர்கள் பள்ளிக்கு வர தேவையில்லை: அமைச்சர் அன்பில் மகேஷ் தகவல்!

மாணவர்கள் பள்ளிக்கு வர தேவையில்லை: அமைச்சர் அன்பில் மகேஷ் தகவல்!

கொரோனா காரணமாக தமிழகத்தில் மூடப்பட்டிருந்த பள்ளிகள் கடந்த 1ஆம் தேதி முதல் மீண்டும் திறக்கப்பட்டுள்ளன. 9 முதல் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு வழிகாட்டு நெறிமுறைகளின்படி, பள்ளிகள் திறக்கப்பட்டு சுழற்சி முறையில் நேரடி வகுப்புகள் நடைபெற்று வருகின்றன.

ஆனால், தொடக்க பள்ளி மாணவர்களுக்கு இன்னும் பள்ளிகள் திறக்கப்படவில்லை. ஆரம்ப, நடுநிலைப் பள்ளி மாணவர்களுக்கு நேரடி வகுப்புகள் தொடங்குவது தொடர்பாக அரசு ஆலோசனை மேற்கொண்டு வருகிறது. தொடக்கப் பள்ளிகளை திறப்பதற்கான பல்வேறு ஆலோசனைகள் பெற்றோர்களிடமும் ஆசிரியர்களிடமும் கேட்கப்பட்டு வருகிறது. இக்கருத்துக்களின் அடிப்படையில் முதல்வர் பள்ளிகளை திறப்பதற்கான நல்ல முடிவினை எடுப்பார் என்று பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார். மாணவர்களின் நலன் தான் முக்கியம் என்றும், அதனடிப்படையிலேயே முடிவெடுக்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

அடுத்த ஊரடங்கு அறிவிப்பின்போது, தொடக்க பள்ளிகளை திறப்பது தொடர்பான அறிவிப்பு வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதற்கான முன்னோட்டமாக பல்வேறு ஆலோசனைகளை அரசு மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில், தமிழகத்தில் 1 முதல் 8ஆம் வகுப்பு வரை பள்ளிகளை திறப்பது குறித்து நடந்த ஆலோசனைக்கு பிறகு செய்தியாளார்களை சந்தித்த பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ், மாணவர்கள் கட்டாயம் பள்ளிக்கு வர வேண்டிய அவசியமில்லை. அரசு பள்ளிகள் திறந்திருக்கும். வர வேண்டியவர்கள் வரலாம் என்று தெரிவித்துள்ளார்.

பள்ளிகளை முழுவதுமாக திறக்காததால் விமர்சனங்கள் எழுந்தாலும் பரவாயில்லை. அதனால் குழந்தைகள் பாதிக்கப்படக் கூடாது. பள்ளிகள் திறப்பது குறித்து முதல்வர் முடிவெடுப்பார் என்றும் அவர் அப்போது தெரிவித்தார். ஏற்கனவே, பள்ளி சென்ற மாணவர்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதால் பெற்றோர்கள் மத்தியில் அச்சம் ஏற்பட்டுள்ளது. பள்ளிகளை மீண்டும் மூட வேண்டும் என்ற கோரிக்கைகளும் எழுந்துள்ளன.

No comments:

Post a Comment

Post Top Ad