கோவை, நீலகிரியில் கனமழை: வானிலை ரிப்போர்ட்! - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Sunday, September 5, 2021

கோவை, நீலகிரியில் கனமழை: வானிலை ரிப்போர்ட்!

கோவை, நீலகிரியில் கனமழை: வானிலை ரிப்போர்ட்!

தென்மேற்கு பருவ காற்று காரணமாக நீலகிரி, கோயம்பத்தூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இன்று கன மழையும், ஏனைய மேற்கு தொடர்ச்சி மலை ஒட்டிய (திருப்பூர், தேனி, திண்டுக்கல், தென்காசி) மாவட்டங்கள், தென் மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்கள், சேலம், ஈரோடு, கிருஷ்ணகிரி, வேலூர், தர்மபுரி, திருப்பத்தூர், ராணிப்பேட்டை, திருவள்ளூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இன்று இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான
இதுகுறித்து வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், வட உள் மாவட்டங்கள், மேற்கு தொடர்ச்சி மலை ஒட்டிய (நீலகிரி, கோயம்பத்தூர், திருப்பூர், தேனி, திண்டுக்கல், தென்காசி) மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை நாளை பெய்யக்கூடும். வருகிற 7ஆம் தேதி முதல் 9ஆம் தேதி வரை வட கடலோர மாவட்டங்கள், மேற்கு தொடர்ச்சி மலை ஒட்டிய (நீலகிரி, கோயம்பத்தூர், திருப்பூர், தேனி, திண்டுக்கல், தென்காசி) மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

Post Top Ad