கேரளாவில் நிபா வைரஸ் எதிரொலி: தமிழகத்தில் கண்காணிப்பு பணிகள் தீவிரம்! - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Sunday, September 5, 2021

கேரளாவில் நிபா வைரஸ் எதிரொலி: தமிழகத்தில் கண்காணிப்பு பணிகள் தீவிரம்!

கேரளாவில் நிபா வைரஸ் எதிரொலி: தமிழகத்தில் கண்காணிப்பு பணிகள் தீவிரம்!

சைதாப்பேட்டை சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட மடுவின்கரை மாநகராட்சி மேல்நிலைப்பள்ளியில் மாற்றுத்திறனாளிகள், ஆதரவற்றோர்கள், முதியவர்கள், விதவைகள் உடல் ஊனமுற்றவர்களுக்கான உதவித்தொகை வழங்கும் திட்டத்தை மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் மா.சுப்ரமணியன் தொடங்கி வைத்தார்.

அதன்பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், கேரளாவில் ஜிகா வைரஸ் தாக்கம் ஏற்படும் போதே, கேரளா தமிழக எல்லையில் காய்ச்சல் முகாம்கள் தீவிரப்படுத்தப்பட்டது. தற்போது கேரளாவில் நிபா வைரஸ் கண்டறியபட்ட நிலையில், தமிழக கேரள எல்லையோர மாவட்டங்களில் கண்காணிப்பு பணியை தீவிர படுத்த மாவட்ட சுகாதாரத்துறை அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது என்றார்.

இதுவரை தமிழகத்தில் 3கோடியே 50 லட்சத்து 20 ஆயிரத்து 70 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக தகவல் தெரிவித்த அமைச்சர் மா.சுப்பிரமணியன், நேற்று ஒரே நாளில் தமிழகத்தில் புதிய உச்சமாக 6 லட்சத்து 20 ஆயிரத்து 225 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. தொடர்ந்து தடுப்பூசி செலுத்தி கொள்பவர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. மத்திய அரசிடம் இருந்து இன்று ஒரே நாளில் 19 லட்சத்து 22 ஆயிரத்து 80 டோஸ் தடுப்பூசிகள் தமிழகம் வர உள்ளன. வருகிற 12ஆம் தேதி தமிழகத்தில் 10,000 தடுப்பூசி முகாம்கள் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது என்றார்.

பள்ளி கல்லூரிகள் திறப்பால் பெருமளவில் இதுவரை நோய் தொற்று கண்டறியப்படவில்லை. நோய் தொற்று கண்டறியப்பட்ட பள்ளி மற்றும் கல்லூரிகள் மூடப்பட்டு நோய் தடுப்பு பணிகள் தீவிரபடுத்தபட்டுள்ளது‌. தடுப்பூசிக்கு கட்டுப்படாத சி.1.2 வகை கொரனோ வைரஸ் உலக அளவில் 9 நாடுகளில் பரவிய நிலையில், தமிழகத்தில் உள்ள அனைத்து விமான நிலையங்களிலும் கண்காணிப்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது என்றும் அமைச்சர் அப்போது தெரிவித்தார்.

No comments:

Post a Comment

Post Top Ad