1 முதல் 8ஆம் வகுப்புகளுக்கு பள்ளிகள் திறப்பு எப்போது? அமைச்சர் சொன்ன முக்கிய தகவல்! - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Sunday, September 5, 2021

1 முதல் 8ஆம் வகுப்புகளுக்கு பள்ளிகள் திறப்பு எப்போது? அமைச்சர் சொன்ன முக்கிய தகவல்!

1 முதல் 8ஆம் வகுப்புகளுக்கு பள்ளிகள் திறப்பு எப்போது? அமைச்சர் சொன்ன முக்கிய தகவல்!

தமிழகத்தில் மூடப்பட்டிருந்த பள்ளிகள் கடந்த 1ஆம் தேதி முதல் மீண்டும் திறக்கப்பட்டுள்ளன. 9 முதல் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டு நேரடி வகுப்புகள் நடைபெற்று வருகின்றன. அனைத்து கல்லூரிகளும் திறக்கப்பட்டுள்ளன.

ஆரம்ப, நடுநிலைப் பள்ளி மாணவர்களுக்கு நேரடி வகுப்புகள் தொடங்குவது தொடர்பாக செப்டம்பர் 15ஆம் தேதிக்குப் பிறகு முடிவெடுக்கப்படும் என ஏற்கெனவ ே தெரிவிக்கப்பட்டுள்ளது. பள்ளிகள் திறக்கப்பட்டு மாணவர்கள் மன சோர்வில் இருந்து விடுபட்டிருந்தாலும், பள்ளிகளுக்கு சென்ற மாணவர்கள், ஆசிரியர்கள் சிலருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.

மாணவர்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது பெற்றோர்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனால், பள்ளிகளை மீண்டும் மூட வேண்டும் என்ற கோரிக்கைகளும் விடுக்கப்பட்டு வருகின்றன. காய்ச்சல், வாந்தி, பேதி, இருமல், உடல் வலி, சோர்வு உள்ளிட்ட கொரோனா தொற்று அறிகுறிகள் தெரிந்தால், மாணவர்கள், ஆசிரியர்கள் பள்ளிக்கு வர வேண்டாம் என்று மாவட்ட கல்வி அதிகாரிகள், தலைமை ஆசிரியர்களுக்கு புதிய அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளனர்.

இதனால் 1 முதல் 8ஆம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்படுவது தள்ளிப் போக வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்த நிலையில், 1 முதல் 8 ஆம் வகுப்பு வரை பள்ளிகள் திறப்பது குறித்து பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தகவல் தெரிவித்துள்ளார்.

திருச்சியில் செய்தியாளர்களிடம் பேசிய பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, “தொடக்க பள்ளி என்பது மிகவும் முக்கியமானது. கொரோனா கட்டுப்பாட்டில் இருக்கும் இந்த சூழலில், தமிழகத்தில் 1 முதல் 8ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பள்ளிகள் திறப்பது குறித்து செப்டம்பர் 8ஆம் தேதிக்கு பின் முடிவு எடுக்கப்படும். முதல்வருடன் ஆலோசனை நடத்தி முடிவு எடுக்கப்படும். பள்ளிக்கு வரும் மாணவர்களின் பாதுகாப்பை மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும்” என்றார்.

No comments:

Post a Comment

Post Top Ad