வண்டலூர் புதிய பேருந்து நிலையம்: வெளியான முக்கிய அறிவிப்பு! - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Wednesday, September 1, 2021

வண்டலூர் புதிய பேருந்து நிலையம்: வெளியான முக்கிய அறிவிப்பு!

வண்டலூர் புதிய பேருந்து நிலையம்: வெளியான முக்கிய அறிவிப்பு!

தமிழகத்தில் உள்ள மிகப்பெரிய பேருந்து நிலையமாக சென்னை கோயம்பேடு பேருந்து நிலையம் உள்ளது. தமிழகம் முழுவதுக்கும் சென்னையில் இங்கிருந்துதான் பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. இதனால், சென்னையில் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வந்தது.

குறிப்பாக பண்டிகை நாள்களுக்கு முன்பு, கடும் வாகன நெரிசல் ஏற்படுவதை தவிர்க்க முடியாமல் இருந்தது. இதனைத் தவிர்க்க வெவ்வேறு மாவட்டங்களுக்குச் செல்லும் பேருந்துகள் சென்னையை சுற்றியிருக்கும் பல்வேறு பேருந்து நிலையங்களிலிருந்து இயக்க தற்காலிகமாக முடிவு செய்யப்பட்டு அதன்படி இயக்கப்படுகிறது.

இதற்கு நிரந்தர தீர்வு காண ரூ.393 கோடியில் சென்னையை அடுத்த வண்டலூர், கிளாம்பாக்கத்தில் புதிய வேருந்து நிலையம் கட்டப்பட்டு வருகிறது. இதன் இறுதி கட்ட பணிகள் நடைபெற்று வரும் நிலையில், இந்த புதிய பேருந்து நிலையம் அடுத்த ஆண்டு முதல் செயல்பாட்டுக்கு வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழக சட்டப்பேரவையில் இன்று அறிவிக்கப்பட்ட வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சி துறை கொள்கை விளக்கக் குறிப்பில் மேற்கண்ட இந்த தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதில், 2022 ஆம் ஆண்டு மார்ச் முதல் இந்தப் புதிய பேருந்து நிலையம் செயல்படத் தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

அதேபோல், திருமழிசை அருகே குத்தம்பாக்கத்தில் ரூ.336 கோடியில் கட்டப்பட்டு வரும் புதிய பேருந்து நிலையம் வரும் 2022, அக்டோபர் முதல் செயல்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் சென்னையில் போக்குவரத்து நெரிசல் கணிசமாக குறைய வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

No comments:

Post a Comment

Post Top Ad