ஆட்சியை இழக்க நேரிடும்: திமுகவை எச்சரிக்கும் அண்ணாமலை! - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Wednesday, September 1, 2021

ஆட்சியை இழக்க நேரிடும்: திமுகவை எச்சரிக்கும் அண்ணாமலை!

ஆட்சியை இழக்க நேரிடும்: திமுகவை எச்சரிக்கும் அண்ணாமலை!

தமிழ்நாட்டில் வருகிற செப்யம்பர் மாதம் 15ஆம் தேதி வரை கொண்டாடப்படவுள்ள சமய விழாக்களின் கொண்டாட்டங்களிற்கு பல்வேறு கட்டுப்பாடுகளை தமிழக அரசு விதித்துள்ளது. விநாயகர் சதுர்த்தி விழா தொடர்பாக பொது இடங்களில் சிலைகளை நிறுவுவது அல்லது பொது இடங்களில் விழா கொண்டாடுவதற்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. சிலைகளை ஊர்வலமாக எடுத்துச் செல்வதற்கும், நீர்நிலைகளில் சிலைகளைக் கரைப்பதற்கும் அனுமதி கிடையாது.

ஆனால், விநாயகர் சதுர்த்தி விழா தொடர்பாக தனி நபர்கள் தங்களது இல்லங்களில் விநாயகர் சிலைகளை வைத்து வழிபடவும், தனி நபர்களாகச் சென்று அருகிலுள்ள நீர்நிலைகளில் சிலைகளைக் கரைப்பதற்கும் தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது.

வழிபாடு செய்யப்பட்ட சிலைகளை ஆலயங்களின் வெளிப்புறத்திலோ / சுற்றுப்புறத்திலோ வைத்துச் செல்வதற்கும், இச்சிலைகளை பின்னர் முறையாக அகற்றுவதற்கு இந்து சமய அறநிலையத்துறையால் தக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும் தமிழக அரசு அறிவித்துள்ளது.

ஆனால், இந்த அறிவிப்புக்கு இந்து அமைப்புகள் கடும் கண்டனங்களை தெரிவித்து வருகின்றன. டாஸ்மாக்கை திறந்து அதிகமான மக்களை விடுகிறார்கள். எதற்காக விநாயகர் சதுர்த்தி பேரணியைத் தடை செய்ய வேண்டும். அரசு கட்டுப்பாடுகளை விதிக்கலாம். ஆனால், நடத்தவே கூடாது என்று சொல்வதை பாஜக ஏற்றுக் கொள்ளாது என்று அக்கட்சியின் மாநிலத் தலைவர் அண்ணாமலை எதிர்ப்பு தெரிவித்திருந்தார்.

அதன் தொடர்ச்சியாக, விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்தை கையிலெடுத்து திமுக அரசியல் செய்ய நினைத்தால் ஆட்சியை இழக்க நேரிடும் என பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை எச்சரிக்கை விடுத்துள்ளார்.

No comments:

Post a Comment

Post Top Ad