இந்த ஆறு மாவட்டங்களில் கடும் லாக்டவுன் அமலாகுமா? கலங்க வைக்கும் நிலவரம்! - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Wednesday, September 1, 2021

இந்த ஆறு மாவட்டங்களில் கடும் லாக்டவுன் அமலாகுமா? கலங்க வைக்கும் நிலவரம்!

இந்த ஆறு மாவட்டங்களில் கடும் லாக்டவுன் அமலாகுமா? கலங்க வைக்கும் நிலவரம்!

தமிழகத்தில் தினசரி கொரோனா தொற்று 1,600க்கும் கீழ் குறைந்துள்ளது. நேற்று புதிதாக 1,512 பேருக்கு வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அதில் 1,725 பேர் குணமடைந்துள்ளனர். 22 பேர் பலியாகி இருக்கின்றனர். தற்போது 16,850 பேர் கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். கடந்த ஏப்ரல் 29 - ஜூன் 8 காலகட்டத்தில் மாநிலத்தின் சராசரி பாதிப்புகள் 28 ஆயிரமாகவும், உயிரிழப்புகள் 340ஆகவும் பதிவானது. மே 21ஆம் தேதி புதிய உச்சமாக 36 ஆயிரத்திற்கும் அதிகமாக தொற்று கண்டறியப்பட்டது. அதன்பிறகு படிப்படியாக சரியத் தொடங்கியது. அதேசமயம் 15 மாவட்டங்களில் மட்டும் லேசான அதிகரிப்பு காணப்பட்டது.

எந்தெந்த மாவட்டங்கள்?

தற்போது நிலைமை பெரிதும் கட்டுக்குள் வந்திருக்கிறது. இந்நிலையில் ஒரு வாரத்திற்கு மில்லியனில் 200 முதல் 500 வரையிலான பாதிப்புகளை பதிவு செய்து அதிக ஆபத்து நிறைந்த ஆறு மாவட்டங்களின் பட்டியல் கிடைத்துள்ளது. அவை, செங்கல்பட்டு,

கோயம்புத்தூர், ஈரோடு, நாகப்பட்டினம், நீலகிரி, தஞ்சாவூர் ஆகும். இதில் அதிகபட்சமாக ஈரோட்டில் 365 பேரும், கோயம்புத்தூரில் 355 பேரும், செங்கல்பட்டில் 302 பேரும், தஞ்சாவூரில் 229 பேரும், நாகப்பட்டினத்தில் 219 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

மிக மோசம் எதுவுமில்லை

அதிகபட்ச பாசிடிவ் விகிதம் கொண்ட மாவட்டமாக தஞ்சாவூர் (2%) காணப்படுகிறது. இதற்கு அடுத்த இடத்தில் 1.8 சதவீதத்துடன் கோயம்புத்தூர் உள்ளது. அதேசமயம் மிகவும் குறைந்த பாதிப்பு அல்லது மிக மிக அதிக பாதிப்பு கொண்ட மாவட்டங்களாக எதுவும் இல்லை என்று கூறப்பட்டுள்ளது. இதுதொடர்பாக சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் கூறுகையில், அனைத்து மாவட்டங்களும் ஒரு வாரத்தில் மில்லியனில் 500 பேருக்கும் குறைவாக மட்டுமே பாதிப்புகளை பதிவு செய்து வருகின்றன.

முன்னெச்சரிக்கை தீவிரம்


வைரஸ் தொற்று வீழ்ச்சியடையும் விகிதத்தின் வேகம் குறைந்திருக்கிறது. பல மாவட்டங்களில் புதிய பாதிப்புகள் பெரிதாக இல்லாத வகையில் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. 16 மாவட்டங்களில் மட்டும் பாசிடிவ் விகிதம் 1%க்கும் அதிகமாக இருக்கிறது என்று கூறினார். அதிகப்படியான தளர்வுகளால் மக்கள் அதிகளவில் கட்டுப்பாடுகளை மீறுவதை பார்க்க முடிகிறது. குறிப்பாக வழிபாட்டுத் தலங்கள் மற்றும் உணவகங்களில் அடிக்கடி கொரோனா வழிகாட்டுதல்கள் மீறப்படுகின்றன எனக் குறிப்பிட்டார்.

பொது சுகாதாரத்துறை இயக்குநர் டாக்டர் டி.எஸ்.செல்வ விநாயகம் கூறுகையில், சர்வதேச அளவில் பல்வேறு நாடுகளில் புதிய அலைகளால் ஏற்பட்ட பாதிப்புகள் மிக மோசமானதாக இருந்தது. அதிலிருந்து நாம் பாடம் கற்றுக் கொள்ள வேண்டும். உரிய கொரோனா வழிகாட்டுதல்களை பின்பற்ற வேண்டும். மாநில சுகாதாரத்துறையின் அனைத்து மட்டங்களிலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை வேகமாக செயல்படுத்த வேண்டும் என்று வலியுறுத்தினார்.

No comments:

Post a Comment

Post Top Ad