வேலுமணிக்கு நெருக்கமானவர்களை வளைத்த லஞ்ச ஒழிப்புத் துறை! - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Wednesday, September 29, 2021

வேலுமணிக்கு நெருக்கமானவர்களை வளைத்த லஞ்ச ஒழிப்புத் துறை!

வேலுமணிக்கு நெருக்கமானவர்களை வளைத்த லஞ்ச ஒழிப்புத் துறை!

புதுக்கோட்டையில் அதிமுக மாஜி அமைச்சர் வேலுமணியின் ஆதரவாளர் வீடு உள்பட 9 இடங்களில் லஞ்ச ஒழிப்பு துறை போலீசார் இன்று அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர். இதில் 100 மடங்கு சொத்து குவித்தது தெரியவந்துள்ளது.
அதிமுக முன்னாள் அமைச்சர்களின் வீடுகளில் லஞ்ச ஒழிப்பு துறை போலீசார் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர். எம்.ஆர்.விஜயபாஸ்கர், எஸ்.பி.வேலுமணி, கே.சி.வீரமணி ஆகியோரது இடங்களிலும் அவர்களுக்கு நெருக்கமானவர்களின் இடங்களிலும் சோதனை நடைபெற்றது. நாளை ஆலந்தூரில் உள்ள லஞ்ச ஒழிப்புத்துறை அலுவலகத்தில் ஆஜராகுமாறு எம்.ஆர்.விஜயபாஸ்கருக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.

ஆகஸ்ட் 10ம் தேதி வேலுமணி மற்றும் சகோதரர்கள், பினாமிகள் வீடுகள், நிறுவனங்கள் என 52 இடங்களில் அதிரடி சோதனை நடைபெற்றது. இதில் வங்கியில் வைப்பு நிதியாக வைக்கப்பட்டிருந்த ரூ.2 கோடிக்கான ஆவணங்கள், கணக்கில் வராத ரூ.13 லட்சம் ரொக்கம் மற்றும் டெண்டர் தொடர்பான ஆவணங்கள், கோடிக்கணக்கான ரூபாய் மதிப்பிலான சொத்து ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன.

இது தொடர்பாக வேலுமணி, அவரது சகோதரர் அன்பரசன் மற்றும் சந்திரசேகர், முருகேசன், ஜேசு ராபர்ட் ராஜா, கு.ராஜன் உள்ளிட்ட 17 பேர் மற்றும் 10 நிறுவனங்கள் மீது லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.



புதுக்கோட்டை மாவட்டம் வெட்டன் விடுதி அருகே உள்ள முள்ளங்குறிச்சி ஊராட்சி கருக்காகாடு கிராமத்தை சேரந்த முருகானந்தம் (56), ஊரக வளர்ச்சி துறை அலுவலராக உள்ளார். இவர் வேலுமணியின் நெருங்கிய ஆதரவாளர். இவரது அண்ணன் ரவிச்சந்திரன் (58), தம்பி பழனிவேல் (54).



முருகானந்தத்தின் மனைவி காந்திமதி, முள்ளங்குறிச்சி ஊராட்சி மன்ற தலைவராக உள்ளார். சகோதரர்கள் மூவரும் புதுக்கோட்டை சார்லஸ் நகரில் உள்ள சொந்த பங்களாவில் தனித்தனியாக வசித்து வருகின்றனர்.

வேலுமணியுடன் தனக்கிருக்கும் நெருக்கத்தை பயன்படுத்தி தமிழகம் முழுவதும் பிளிச்சிங் பவுடர் சப்ளை, சோலார் லைட் என பெரிய பெரிய ஒப்பந்தங்களை பெற்று கோடி, கோடியாக பணம் சம்பாதித்தது சொத்துக்களை வாங்கி குவித்துள்ளனர்.

இதனால் இவர்களது இடங்களில் காலை முதல் லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸார் சோதனை நடத்தி வருகின்றனர்.

No comments:

Post a Comment

Post Top Ad