தமிழக அரசின் ஊரடங்கால் பெரிய சிக்கல்; தவிக்கும் எல்லையோர பொதுமக்கள்! - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Wednesday, September 29, 2021

தமிழக அரசின் ஊரடங்கால் பெரிய சிக்கல்; தவிக்கும் எல்லையோர பொதுமக்கள்!

தமிழக அரசின் ஊரடங்கால் பெரிய சிக்கல்; தவிக்கும் எல்லையோர பொதுமக்கள்!

தமிழகத்தில் கொரோனா பரவலை தடுக்கும் வகையில் ஊரடங்கு கட்டுப்பாடுகள் வரும் அக்டோபர் 31ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளன. கொரோனா வைரஸ் நோய்த்தொற்று பரவலைத் தடுக்க நோய்த்தொற்று பாதிப்பிற்கு ஆளானவர்கள் உள்ள பகுதிகளில், நோய்க் கட்டுப்பாட்டு மண்டல எல்லைகளை நுண்ணளவு வரை வரையறை செய்து, நிலையான வழிகாட்டு நடைமுறைகளின்படி, தீவிரமாக நோய்த் தடுப்பு நடவடிக்கைகளை மாவட்ட ஆட்சியர் மற்றும் உள்ளாட்சி அமைப்புகள் மேற்கொள்ள வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது.


குறிப்பாக கேரள மாநிலத்தில் நோய்த்தொற்று அதிகமிருப்பதால் அங்கிருந்து வரும் மக்களுக்கு கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. இது கேரள எல்லையில் அமைந்துள்ள வெட்டிவிட்டகாடு காலனியில் வசித்து வரும் மக்களுக்கு பெரும் சிக்கலை ஏற்படுத்தியுள்ளது. ஏனெனில் இவர்களது கிராமம் கேரளாவில் அமைந்திருந்தாலும், தங்களது அனைத்து தேவைகளுக்கும் தமிழக எல்லைக்குள் வர வேண்டிய அவசியமிருக்கிறது. இத்தனை ஆண்டுகள் அவ்வாறே வாழ்ந்து வருகின்றனர். மளிகை பொருட்கள் வாங்குவதற்கு கூட மலக்கப்பாரா அருகிலுள்ள தமிழக செக்போஸ்ட்டை கடந்து உள்ளே வர வேண்டும்.

ஆனால் கொரோனா கட்டுப்பாடுகள் காரணமாக போலீசார் அனுமதிக்க மறுப்பதாக வெட்டிவிட்டகாடு காலனி மக்கள் வேதனை தெரிவித்துள்ளனர். இந்த காலனி அடர்ந்த வனப்பகுதிக்குள் அமைந்துள்ளது. 20 ஆண்கள், 18 பெண்கள் மற்றும் அவர்களது 13 குழந்தைகள் வசித்து வருகின்றனர். இவர்கள் முத்துவன் சமூகத்தை சேர்ந்தவர்கள் என்று சொல்லப்படுகிறது. இவர்களது கிராமத்தில் இருந்து 25 கிலோமீட்டர் தொலைவில் தான் ரேஷன் கடை அமைந்துள்ளது.இங்கிருந்து சுமார் 40 கிலோ மளிகைப் பொருட்களை தலையில் சுமந்து கொண்டு நடந்தே கிராமத்திற்கு வரவேண்டியுள்ளது. மேலும் மருத்துவ வசதிகளை பெற வால்பாறைக்கு தான் வர வேண்டும் என்கின்றனர். அவசர மருத்துவ தேவை என்றால் ஆம்புலன்ஸ் சாலக்குடியில் இருந்து வர வேண்டும். ஆனால் மலைப் பகுதிகளை சுற்றி 100 கிலோமீட்டர் தூரத்தை கடந்து வரவேண்டி இருப்பதாக கூறுகின்றனர்.

தற்போது மலக்கப்பாரா ஸ்டேஷனில் ஓர் ஆம்புலன்ஸ் வசதி செய்யப்பட்டுள்ளது. இருப்பினும் தங்களது கிராமத்திற்கு சாலை வசதி செய்து தர வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர். அதுமட்டுமின்றி மின்சார வசதி, மொபைல் நெட்வொர்க் வசதிகள் இல்லை. இதனால் தகவல்தொடர்பு மற்றும் பிள்ளைகளின் கல்வி ஆகியவை கேள்விக்குறியாக இருக்கிறது என்று குறிப்பிட்டுள்ளனர்.

No comments:

Post a Comment

Post Top Ad