ஜெயலலிதா போன்று செயல்படும் முதல்வர் ஸ்டாலின்: முன்னாள் அமைச்சர் பாராட்டு! - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Wednesday, September 29, 2021

ஜெயலலிதா போன்று செயல்படும் முதல்வர் ஸ்டாலின்: முன்னாள் அமைச்சர் பாராட்டு!

ஜெயலலிதா போன்று செயல்படும் முதல்வர் ஸ்டாலின்: முன்னாள் அமைச்சர் பாராட்டு!

ஒரு மாநிலத்தில் அமைதியான சூழல் நிலவ வேண்டுமானால், அம்மாநில அரசு சட்டம் - ஒழுங்கு பிரச்சினையில் தனிக்கவனம் செலுத்த வேண்டும். பொது அமைதிக்குக் குந்தகம்‌ ஏற்படாமல் நடவடிக்கை எடுக்க வேண்டும். அந்த வகையில், முன்னாள் முதல்வர் ஜெயலலிதா ரவுடிகளை ஒடுக்குவதில் தனிக்கவனம் செலுத்துவார், அவரது ஆட்சியில் கடுமையான நடவடிக்கைகள் மூலம் சட்டம்-ஒழுங்கு பிரச்சினை சரியாக கையாளப்படும் என்று பேசப்படுவதுண்டு.

இந்த நிலையில், தமிழகத்தில் ஆங்காங்கே அன்றாடம்‌ கொலைக்‌ குற்றங்கள்‌ நிகழ்ந்து வருவது மிகுந்த மன வேதனையை அளிப்பதாகவும், இதுபோன்ற செயல்கள் பொருளாதார வளர்ச்சியை பாதிக்கும் என்றும் சில தினங்களுக்கு முன்னர் அறிக்கை வெளியிட்ட அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ், சட்டம்‌- ஒழுங்கைச் சீரழிக்கும்‌ முயற்சிகளில்‌ ஈடுபடுவோரை இரும்புக்‌ கரம்‌ கொண்டு அடக்க வேண்டும் என்று வலியுறுத்தியிருந்தார்.

திமுக ஆட்சிப் பொறுப்பேற்றதும் முதல்வராக இருக்கும் ஸ்டாலின், தனது அரசின் மீது எந்தவொரு விமர்சனமும் எழுந்து விடக் கூடாது என்பதில் கவனமாக உள்ளார். அத்துடன், எதிர்க்கட்சிகள் தெரிவிக்கும் கருத்துகளை செவி கொடுத்து கேட்டு அதற்கு தேவையான நடவடிக்கைகளையும் எடுத்து வருகிறார். ஸ்டாலினின் இந்த அனுகுமுறை பலராலும் பாராட்டப்பட்டு வருகிறது.

அந்த வகையில், தமிழகத்தில் கடந்த சில தினங்களாக டிஜிபி சைலேந்திர பாபு உத்தரவின்படி, ஸ்டார்மிங் ஆபரேஷன் எனப்படும் தீவிர சோதனைகளில் ஈடுபட்டு ரவுடிகளை போலீசார் கைது செய்து வருகின்றனர். கொலைக் குற்றஙளில் ஈடுபடுகின்ற ரவுடிகளுக்கு எதிரான காவல்துறையின் இந்த கடுமையான நடவடிக்கைகள் தொடர்ந்து நடைபெறும் என்றும் டிஜிபி சைலேந்திர பாபு எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இந்த நிலையில், முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவை போலவே முதல்வர் மு.க.ஸ்டாலினும் நடவடிக்கை மேற்கொள்வதாக அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு தெரிவித்துள்ளார். ரவுடிகளை அடக்கி ஒடுக்குவதில் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவை போலவே முதல்வர் மு.க.ஸ்டாலினும் நடவடிக்கை மேற்கொள்வதாக அவர் பாராட்டு தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment

Post Top Ad