ஏன் இப்படி பயப்படுறீங்க? அப்போ ஏதோ இருக்குது - அண்ணாமலை பகீர்!
சீர்காழியில் செய்தியாளர்களிடம் பேசிய
பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை, தமிழகத்தில் நீட் தேர்விற்காக இதுவரை ஏராளமான மாணவச் செல்வங்கள் தங்கள் உயிரை மாய்த்துக் கொண்டிருக்கின்றனர். சமீபத்தில் சேலத்தில் தனுஷும், அரியலூரில் கனிமொழியும் உயிரை விட்டிருப்பது மிகப்பெரிய வருத்தமான நிகழ்வு. மாணவச் செல்வங்கள் இதுபோன்ற விஷயங்களில் ஈடுபடக் கூடாது என்று கெஞ்சி கேட்டுக் கொள்கிறேன். ஏனெனில் நீட் தேர்வை வைத்து அரசியல் செய்பவர்களை நாங்கள் பார்த்துக் கொள்கிறோம். அரசியல் செய்து உணர்ச்சியை தூண்டி இந்த நிலைக்கு கொண்ட
ு வந்து விட்டுள்ளார்கள். இதனை தமிழக மக்களும், பாஜகவும் ஒருபோதும் மன்னிக்க மாட்டார்கள்.
நீட் விஷயத்தில் தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் என்னை வைத்து காமெடி செய்தார்கள். அண்ணாமலையை வரச் சொல்லுங்கள். நாங்கள் இருவரும் நீட் தேர்வு எழுதுகிறோம் என்று. ஆரம்பத்தில் நீட் தேர்வு வராது என்று மாணவர்களுக்கு நம்பிக்கை அளித்து விட்டு, கடைசி நேரத்தில் நீட் வருகிறது என்றால் அதனை மாணவர்கள் எப்படி எதிர்கொள்வார்கள். கொரோனா நெருக்கடியால் சரியாக தயாராகாத மாணவர்கள் மிகுந்த மன உளைச்சலுக்கு தான் ஆளாகினர். நாங்கள் தொடர்ச்சியாக சொல்லிக் கொண்டிருக்கிறோம். நீட் எந்தவொரு சமூகத்திற்கும் எதிரானது அல்ல. இதற்கு முன்பு தமிழக அரசுப் பள்ளிகளில் இருந்து மாணவர்கள் நீட் எழுதி தேர்ச்சி பெற்று மருத்துவர்கள் ஆகியிருக்கின்றனர். அதற்கு கடந்த அதிமுக அரசும் ஒரு காரணம்.
ஆனால் தற்போதைய திமுக அரசு அரசியல் செய்யும் நோக்கில் நீட் விஷயத்தில் எந்தவொரு முன்னெச்சரிக்கை நடவடிக்கையும் எடுக்கவில்லை. ஏற்கனவே உச்ச நீதிமன்றமும், இந்திய மருத்துவக் கவுன்சிலும் நீட் செல்லும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளன.
அப்படியிருக்கையில் மு.க.ஸ்டாலின் அவர்கள் இதனை உணர்ந்து தான் பேசுகிறாரா என்று தெரியவில்லை. நீட் தேர்வை வைத்து பயம் காட்டி பயம் காட்டி மாணவர்களை இத்தகைய நிலைக்கு கொண்டு வந்துள்ளனர். ஆந்திர மாநிலத்தில் கூலி வேலைக்கு செல்லும் மாணவர் நீட் தேர்வில் தேர்ச்சி பெற்று மருத்துவர் ஆகியிருக்கிறார். இந்தியாவில் வேறு எங்கேயும் பிரச்சினை கிடையாது. சுந்தர் பிச்சை போன்ற மாபெரும் மனிதர்கள் உருவாகிய தமிழக மண்ணில் நீட்டை வைத்து பிரச்சினையை ஏற்படுத்தி வருகின்றனர்.
இதுபற்றி கேள்வி கேட்டால் ஏதேதோ பதில் சொல்லிக் கொண்டிருக்கின்றனர். நீட் தேர்வு சமூக நீதிக்கு எதிரானதா? தமிழக மக்களுக்கு எதிரானதா? அப்படி எதுவுமே இல்லை. எல்லா மாநிலங்களிலும் இதில் கவனம் செலுத்தி படித்துக் கொண்டிருக்கும் போது இங்கு மட்டும் ஏன் பிரச்சினை செய்கிறார்கள். எனவே நீட் தேர்வால் ஏற்பட்டுள்ள உயிரிழப்புகளுக்கு திமுக அரசு தான் பொறுப்பேற்க வேண்டும் என்று கூறினார். தமிழகத்திற்கு புதிதாக
ஆளுநர் நியமிக்கப்பட்டுள்ள விஷயத்தில் காங்கிரஸ் தலைவர் அழகிரி அச்சம் தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment