இன்று முதல் விருப்ப மனு; திமுகவினருக்கு முக்கிய அறிவிப்பு!
தமிழகத்தில் நீண்ட இழுபறிக்கு பின்னர் கடந்த 2019ஆம் ஆண்டு
உள்ளாட்சி தேர்தல் நடைபெற்றது. ஆனால் ஊரக உள்ளாட்சி பகுதிகளுக்கு மட்டும் தேர்தல் நடந்தது. அதுதவிர தொகுதி வரையறை பணிகள் நிறைவடையாத காரணத்தால் காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, விழுப்புரம்,
கள்ளக்குறிச்சி, திருநெல்வேலி, தென்காசி ஆகிய 9 மாவட்டங்களில் தேர்தல் நடைபெறவில்லை. இதுதொடர்பான வழக்கு விசாரணையில் உச்ச நீதிமன்றம் விதித்த உத்தரவை அடுத்து, விரைவாக அடுத்தகட்ட தேர்தலை நடத்தி முடிக்க மாநில தேர்தல் ஆணையம் நடவடிக்கை மேற்கொண்டது.
உள்ளாட்சி தேர்தல் தேதி
இந்த சூழலில் 9 மாவட்ட ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு வரும் அக்டோபர் மாதம் 6 மற்றும் 9 ஆகிய தேதிகளில் தேர்தல் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதுதவிர 28 மாவட்டங்களில் காலியாக உள்ள பதவிகளுக்கு அக்டோபர் 9ஆம் தேதி தேர்தல் நடக்கிறது. இந்த தேர்தலில் போட்டியிடுவதற்கான வேட்புமனு தாக்கல் இன்று காலை 10 மணிக்கு தொடங்கி வரும் 22ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது.
அரசியல் கட்சிகள் தீவிரம்
இதையடுத்து 23ஆம் தேதி
வேட்புமனுக்கள் மீது பரிசீலனை நடைபெறுகிறது. பின்னர் அக்டோபர் 6 மற்றும் 9 ஆகிய தேதிகளில் வாக்குப்பதிவு நடத்தப்படும். இறுதியாக அக்டோபர் 12ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற்று முடிவுகள் அறிவிக்கப்படவுள்ளன. 9 மாவட்ட ஊரக உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட வேட்பாளர்கள் தேர்வு, தேர்தல் பிரச்சாரம் என பல்வேறு அரசியல் கட்சிகளும் தீவிரமாக தயாராகி வருகின்றன.
திமுக தலைமை முக்கிய அறிவிப்பு
அந்த வகையில் திமுக பொதுச் செயலாளர் துரைமுருகன் முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், திமுக சார்பில் 9 மாவட்ட ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தலில் போட்டியிட விரும்புவோர் இன்று (செப்டம்பர் 15) முதல் விருப்ப மனு அளிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
மாவட்ட ஊராட்சிக் குழு உறுப்பினருக்கு 10 ஆயிரம் ரூபாயும், ஊராட்சி ஒன்றியக் குழு உறுப்பினருக்கு 5 ஆயிரம் ரூபாயும் கட்டணமாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment