அதிமுகவை குற்றம் சாட்டும் ராமதாஸ்: மக்களவைத் தேர்தலுக்கு அமைக்கும் பாலம்! - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Wednesday, September 15, 2021

அதிமுகவை குற்றம் சாட்டும் ராமதாஸ்: மக்களவைத் தேர்தலுக்கு அமைக்கும் பாலம்!

அதிமுகவை குற்றம் சாட்டும் ராமதாஸ்: மக்களவைத் தேர்தலுக்கு அமைக்கும் பாலம்!

சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் வெளியாகி நான்கு மாதங்களே ஆகியுள்ள நிலையில் அதிமுக - பாமக கூட்டணி முறிந்துள்ளது.ஊரக உள்ளாட்சித் தேர்தல் அக்டோபர் 6, 9 ஆகிய தேதிகளில் இரு கட்டங்களாக நடைபெற உள்ளது. இந்நிலையில் இது குறித்து பாமக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நேற்று நடைபெற்றது.

தேர்தல் நடைபெறும் 9 மாவட்டங்களின் துணைப் பொதுச் செயலாளர்கள் உள்ளிட்ட நிர்வாகிகள் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டம் கட்சியின் நிறுவனர் ராமதாஸ் பா.ம.க. இளைஞரணித் தலைவர் அன்புமணி இராமதாஸ் ஆகியோர் முன்னிலையில் நேற்று மாலை நடைபெற்றது.

அந்த ஆலோசனைக் கூட்டத்தில் பாமக தனித்துப் போட்டியிடுவதாக அறிவித்தது. கட்சியின் வளர்ச்சி, நலன் ஆகியவற்றை கருத்தில்கொண்டு இந்த முடிவை எடுத்ததாக அக்கட்சித் தலைவர் ஜி.கே.மணி வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


காணொலி காட்சி மூலம் நடைபெற்ற அந்த கூட்டத்தில் ராமதாஸ் பேசியவை குறித்த முக்கிய தகவல்கள் வெளியாகியுள்ளன. “சட்டமன்றத் தேர்தலின் போது கூட்டணித் தர்மத்தை அதிமுக காப்பாற்றவில்லை. அதிமுகவுக்கு சரியான தலைமை இல்லாததால் அக்கட்சி தொண்டர்கள் நமக்கு ஒத்துழைப்பு அளிக்கவில்லை. நம்மால் கூட்டணிக் கட்சிகள் பயனடைந்தன ஆனால் அவர்களால் நமக்கு அவர்களால் பலன் இல்லை. உள்ளாட்சித் தேர்தலில் தனித்து நின்று நமது வாக்கு சதவீதத்தை நிரூபிப்போம். புதியதோர் விதி செய்வோம், அதை எந்நாளும் காப்போம்” என்று பாமக நிறுவனர் ராமதாஸ் பேசியுள்ளார்.

ராமதாஸின் இந்த பேச்சு அரசியல் அரங்கில் அனலைக் கிளப்பியுள்ளது. குறிப்பாக அதிமுகவுக்கு அதிர்ச்சி வைத்தியமாக அமைந்துள்ளது.

அதிமுகவைப் பொறுத்தவரை சட்டமன்றத் தேர்தலில் மற்ற கட்சிகளைவிட பாமகவுக்கே கூட்டணியில் அதிக முக்கியத்துவம் அளித்தது. பாமக வைத்த கோரிக்கைகளை நிறைவேற்றியது, மற்ற கட்சிகளைவிட அதிக இடங்களை ஒதுக்கியது. தேர்தலுக்குப் பிறகும் பாமகவுக்கான முக்கியத்துவத்தை குறைக்கவில்லை. அதிமுகவை பாமக இளைஞரணித் தலைவர் விமர்சித்த போதும் அதிமுக அமைதி காத்தது. அதே சமயம் அதற்கு உடனடியாக எதிர்வினையாற்றிய புகழேந்தியை கட்சியிலிருந்தே நீக்கியது.

ஆனால் தற்போத ு பாமக கூட்டணியை முறித்துக்கொண்டு சென்றுள்ளது. இதுகுறித்து விசாரிக்கும் போது பல்வேறு தகவல்கள் கிடைக்கின்றன.


No comments:

Post a Comment

Post Top Ad