ரவுடிகளே ஜாக்கிரதை..! உங்களுக்காகவே வருகிறது புதிய சட்டம் - தமிழக அரசு அதிரடி! - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Tuesday, September 28, 2021

ரவுடிகளே ஜாக்கிரதை..! உங்களுக்காகவே வருகிறது புதிய சட்டம் - தமிழக அரசு அதிரடி!

ரவுடிகளே ஜாக்கிரதை..! உங்களுக்காகவே வருகிறது புதிய சட்டம் - தமிழக அரசு அதிரடி!

ரவுடிகளை ஒடுக்க, ‛திட்டமிட்ட குற்றச்செயல்கள் தடுப்பு வரைவு மசோதா' தயாராக உள்ளதாகவும், அடுத்த சட்டப்பேரவைக் கூட்டத்தொடரில் தாக்கல் செய்யப்படும் எனவும், சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு தெரிவித்துள்ளது.

சென்னை அயனாவரத்தில், ரவுடி கும்பலுக்கு இடையில் நடந்த மோதலில், ஜோசப் என்ற ரவுடி வெட்டிக் கொல்லப்பட்டார். இந்த சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்ட வேலு என்பவர், தன்னை குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டதை எதிர்த்து தொடர்ந்த வழக்கின் விசாரணை, சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள் கிருபாகரன், வேல்முருகன் அடங்கிய அமர்வில் நடைபெற்றது.

அப்போது, ரவுடிகள், அரசியல்வாதிகள் என, எல்லோரிடமும் சட்ட விரோத ஆயுதங்கள் இருப்பதாகவும், ரவுடிகளால் போலீசார் தாக்கப்படும் சம்பவங்கள் அதிகரித்து வருவதாகவும், நீதிபதிகள் கவலை தெரிவித்தனர்.

ரவுடிகளையும், சமூக விரோதிகளையும் ஒழிக்க, கடுமையான சட்டம் இயற்றப்பட வேண்டுமென, நீதிபதிகள் உத்தரவிட்டு இருந்தனர். ரவுடிகளை கட்டுப்படுத்துவது தொடர்பான புதிய சட்ட முன் வடிவு தயாரிக்கப்பட்டு உள்துறை கூடுதல் செயலாளரிடம் சமர்ப்பிக்கப்பட்டு உள்ளதாக, டி.ஜி.பி. தரப்பில் தெரிவிக்கப்பட்டதை அடுத்து, சட்ட முன் வடிவை சட்டப்பேரவையில் வைத்து புதிய சட்டம் எப்போது இயற்றப்படும் என்பது குறித்து பதிலளிக்க, தமிழக உள் துறை செயலாளருக்கு நீதிபதிகள் உத்தரவிட்டு இருந்தனர்.

இந்நிலையில், இந்த வழக்கு இன்று மீண்டும் உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்த போது, "திட்டமிட்ட குற்றச் செயல்கள் தடுப்பு சட்டம்" என்ற பெயரில் வரைவு மசோதா தயாராக உள்ளதாகவும், அடுத்த சட்டப்பேரவை கூட்டத்தொடரில் சட்டமாக இயற்றப்படும் எனவும், தமிழக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

திட்டமிட்ட குற்றச் செயல்கள் தடுப்பு சட்ட வரைவு மசோதா தயாராக இருப்பதாக தெரிவித்ததற்கு பாராட்டு தெரிவித்த நீதிபதிகள், இது சட்டமாக இயற்றப்பட்டால் ரவுடிகளை கட்டுப்படுத்த காவல் துறையினருக்கு உதவியாக இருக்கும் என தெரிவித்து வழக்கை முடித்து வைத்தனர்.

No comments:

Post a Comment

Post Top Ad