அண்ணாமலைக்கு கட்டம் கட்டும் டெல்லி? காலியாகும் தலைவர் பதவி? - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Saturday, September 4, 2021

அண்ணாமலைக்கு கட்டம் கட்டும் டெல்லி? காலியாகும் தலைவர் பதவி?

அண்ணாமலைக்கு கட்டம் கட்டும் டெல்லி? காலியாகும் தலைவர் பதவி?

எல்.முருகன் இணை அமைச்சரான பின்னர் பாஜகவை வழிநடத்தும் தலைவர் யார் என்ற விவாதம் நடைபெற்ற போது சீனியர்கள் பலரும் தனக்குத் தான் பதவி என நினைத்துக் கொண்டிருந்தனர். ஆனால் கட்சிக்குள் வந்து ஒரு ஆண்டுகூட முடியாத அண்ணாமலைக்கு தலைவர் பதவி வழங்கப்பட்டது.
பாஜகவை இளைஞர்கள் மத்தியில் பிரபலப்படுத்துவார், பாஜகவின் செயல்பாடுகளை பேசுபொருளாக்குவார் என எதிர்பார்த்த டெல்லி தலைமைக்கு ஷாக் அளிக்கும் வகையில் ஒரு சம்பவம் நடைபெற்றது. அண்ணாமலையின் ஒப்புதலுடன் கே.டி.ராகவனின் ஆபாச வீடியோவை வெளியிட்டார் யூ டியூபர் மதன்.

இதை அண்ணாமலை மறுத்துள்ள போதும் ஆடியோவை வெளியிட்டு உறுதிபடுத்தினார் மதன். வீடியோ வெளியே வராமல் அத்துடன் குற்றம் சாட்டப்பட்ட ராகவன் மீது விசாரணை நடத்தியிருக்கலாம், பாதிக்கப்பட்ட பெண்ணிடம் புகார்கள் பெற்றிருக்கலாம் ஆனால் பொதுவெளியில் வீடியோவை வெளியிடச் செய்து ராகவனின் இமேஜை மட்டுமல்ல கட்சியின் இமேஜையும் டேமேஜ் செய்துவிட்டார் என கட்சிக்குள்ளே அண்ணாமலைக்கு எதிராக புகார்கள் வெளியாகியுள்ளன.

இந்த சூழலில் டெல்லியிலிருந்து அண்ணாமலையை அழைத்து விளக்கம் கேட்பார்கள் என கருதப்பட்டது. அந்த வகையில் தற்போது அண்ணாமலை டெல்லி சென்றுள்ளார். தலைமையின் கண்டிப்புக்கு அண்ணாமலை ஆளாகக்கூடும் என்கிறார்கள்.

தலைவர் பதவியை பறித்துவிடுவார்களோ என்ற பயத்திலேதான் அண்ணாமலையும் கடைக்கோடி தொண்டன் நான் என பேசிவருகிறார்.

உடனடியாக அண்ணாமலையை தலைவர் பதவியிலிருந்து இறக்கினாலும் அது தேவையற்ற விமர்சனங்களை ஏற்படுத்தும் என்றும் டெல்லி நினைக்கிறதாம். அருவருக்கத்தக்க காரியத்தை செய்தவரை கட்சியிலிருந்து நீக்கவில்லை, அவராகவே வெளியேறிவிட்டார். அவரை விட்டுவிட்டு கட்சித் தலைவரை தூக்கிவிட்டார்களே என விமர்சனங்கள் எழும் என நினைக்கிறார்கள்.

No comments:

Post a Comment

Post Top Ad