ஒரு குடும்பம் ஒரு குழந்தை சட்டம் கொண்டு வர பிரதமரிடம் வலியுறுத்தப்படும்: மத்திய அமைச்சர் தகவல்! - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Saturday, September 4, 2021

ஒரு குடும்பம் ஒரு குழந்தை சட்டம் கொண்டு வர பிரதமரிடம் வலியுறுத்தப்படும்: மத்திய அமைச்சர் தகவல்!

ஒரு குடும்பம் ஒரு குழந்தை சட்டம் கொண்டு வர பிரதமரிடம் வலியுறுத்தப்படும்: மத்திய அமைச்சர் தகவல்!

நாட்டில், ஒரு குடும்பம் ஒரு குழந்தை சட்டம் கொண்டு வர பிரதமர் நரேந்திர மோடியிடம் வலியுறுத்தப்படும் என, மத்திய சமூக நீதித் துறை அமைச்சர் ராம்தாஸ் அத்வாலே தெரிவித்து உள்ளார்.

குஜராத் மாநிலம் அகமதாபாத்தில், பா.ஜ.க.வின் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இடம் பெற்றுள்ள இந்தியக் குடியரசுக் கட்சியைச் சேர்ந்த மத்திய சமூக நீதித் துறை அமைச்சர் ராம்தாஸ் அத்வாலே செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது:

நாட்டில் வளர்ச்சியை உறுதி செய்வதற்கு, மக்கள் தொகையை கட்டுப்படுத்த வேண்டியது அவசியம் . எனது தலைமையிலான இந்திய குடியரசு கட்சி, 'ஒரு குழந்தை கொள்கையை' ஆதரிக்கிறது. இந்த கொள்கையை பின்பற்றினால் மக்கள் தொகையை குறைக்க முடியும். இதற்காக 'ஒரு குடும்பம், ஒரு குழந்தை திட்டத்தை' உறுதி செய்யும் சட்ட மசோதாவை கொண்டு வர வேண்டும்.

மேலும், பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து நாடாளுமன்றத்தில் இதற்கான மசோதாவை கொண்டு வர எழுத்துப்பூர்வ கோரிக்கை வைக்கப்படும். கட்சி சார்பில் இதற்கான சட்ட முன்வடிவு பிரதமர் நரேந்திர மோடியிடம் வழங்கப்படும். சட்டத்தை கொண்டு வர முயற்சிப்போம்.
இவ்வாறு அவர் கூறினார்.

தொடர்ந்து, இந்துக்கள் பெரும்பான்மையாக இருக்கும் வரை மட்டுமே மக்கள் அரசியலமைப்பு மற்றும் மதச்சார்பின்மை பற்றி பேச முடியும் என்று சமீபத்தில் குஜராத் துணை முதல்வர் நிதின் படேல் கூறிய கருத்து குறித்து, மத்திய அமைச்சர் ராம்தாஸ் அத்வாலேவிடம் நிருபர்கள் கேள்வி எழுப்பினர். இதற்கு பதிலளித்த அத்வாலே, இந்து மக்கள் தொகை குறைய வாய்ப்பில்லை என்றார்.

No comments:

Post a Comment

Post Top Ad