எக்மோர் ரயில்வே ஸ்டேஷனுக்கு கலைஞர் கருணாநிதி பெயர்! - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Tuesday, September 7, 2021

எக்மோர் ரயில்வே ஸ்டேஷனுக்கு கலைஞர் கருணாநிதி பெயர்!

எக்மோர் ரயில்வே ஸ்டேஷனுக்கு கலைஞர் கருணாநிதி பெயர்!

சட்டப்பேரவையில் இன்று சட்டத்துறை மற்றும் மின் துறை மீதான மானிய கோரிக்கை விவாதம் நடந்தது. இதில், பேசிய எழும்பூர் சட்டமன்ற உறுப்பினர்
பரந்தாமன், சென்னை எழும்பூர் பகுதியை, 900 ஆண்டுகளுக்கு முன் வரலாற்று பதிவுகளில் குறிப்பிடப்பட்டிருப்பது போல எழுமூர் (EZHUMOOR) என பெயர் மாற்றம் செய்ய வேண்டும் என்றார்.

மேலும், சென்னை எழும்பூர் ரயில் நிலையத்திற்கு கலைஞர் கருணாநிதி பெயர் சூட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவர் கோரிக்கை வைத்தார். கடந்த அதிமுக ஆட்சியின் போது சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திற்கு டாக்டர் எம்ஜிஆர் ரயில் நிலையம் என பெயர் சூட்டப்பட்டது.

கடந்த 2019ஆம் ஆண்டு காஞ்சிபுரம் மாவட்டத்தில் நடந்த பொதுக்கூட்டம் ஒன்றில் பங்கேற்ற பிரதமர் மோடியிடம் சென்ட்ரல் ரயில் நிலையத்திற்கு எம்ஜிஆர் பெயரை வைக்க வேண்டும் என்ற கோரிக்கை வைக்கப்பட்டது. அந்த கோரிக்கையை ஏற்று பிரதமர் மோடி அதே கூட்டத்திலேயே அது குறித்த அறிவிப்பை வெளியிட்டார்.

இதையடுத்து, மத்திய உள்துறை அமைச்சகமும் அதற்கு ஒப்புதல் அளித்தது. தொடர்ந்து இது தொடர்பான அரசாணையை தமிழக அரசு பிறப்பித்தது. சினிமா அரசியல் ஆகிய இரண்டு துறைகளிலும் சாதனை செய்தவர் எம்ஜிஆர் என்பதால் அவருடைய பெயர் ரயில் நிலையத்திற்கு வைக்க ஒப்புதல் வழங்கப்பட்டதாகவும் விளக்கம் அளிக்கப்பட்டது. இந்த நிலையில், எழும்பூர் ரயில் நிலையத்திற்கு கலைஞர் கருணாநிதி பெயர் சூட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கையை தமிழக அரசு பரீசிலிக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

ஆங்கிலேயர் ஆட்சியின் போது கடந்த 1905ஆம் ஆண்டில் எழும்பூர் ரயில் நிலையம் கட்டப்பட்டது. 116 ஆண்டுகளாக இயங்கி வரும் இந்த ரயில் நிலையத்தில் நாள்தோறும் லட்சக்கணக்கான பயணிகள் வந்து செல்கின்றனர். இங்கே 11 நடைமேடைகள் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

Post Top Ad