"நீங்க இத செஞ்சா, நாங்க ஜி.எஸ்.டி.,க்கு வர்றோம்!" - நிதி அமைச்சர் பி.டி.ஆர்., ஒன்றிய அரசிடம் டிமாண்ட்! - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Monday, September 20, 2021

"நீங்க இத செஞ்சா, நாங்க ஜி.எஸ்.டி.,க்கு வர்றோம்!" - நிதி அமைச்சர் பி.டி.ஆர்., ஒன்றிய அரசிடம் டிமாண்ட்!

"நீங்க இத செஞ்சா, நாங்க ஜி.எஸ்.டி.,க்கு வர்றோம்!" - நிதி அமைச்சர் பி.டி.ஆர்., ஒன்றிய அரசிடம் டிமாண்ட்!

ஒன்றிய அரசு செஸ் வரியை கைவிட்டால், தமிழக அரசு ஜி.எஸ்.டி.,க்குள் வர தயாராக உள்ளதாக நிதி அமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் தெரிவித்து உள்ளார்.

தீனதயாய் அந்தியோதயா யோஜனா மற்றும் தேசிய நகர்ப்புற வாழ்வாதார இயக்கம் திட்டத்தின் கீழ், மதுரை மாநகராட்சி 250 சாலையோர வியாபாரிகளுக்கு தள்ளுவண்டிகளை, நிதி அமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் வழங்கினார். இந்நிகழ்வில் மாவட்ட ஆட்சியர் அனீஷ் சேகர், மாநகராட்சி ஆணையர் கார்த்திகேயன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

பின்னர் செய்தியாளர்களிடம் நிதி அமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் பேசியதாவது:
பெட்ரோல், டீசல் விலையை ஜி.எஸ்.டி., வரம்புக்குள் கொண்டு வர வேண்டும் என, முதல்வர் மு.க.ஸ்டாலின் 2018 ஆம் ஆண்டு கோரிக்கை விடுத்தார். 2018 ஆம் ஆண்டுக்கும் 2021 ஆம் ஆண்டுக்கும் இடைப்பட்ட காலங்களில் பெட்ரோல், டீசல், கச்சா எண்ணெய் விலையில் பல்வேறு மாற்றங்கள் நிகழ்ந்துள்ளன.


2001 ஆம் ஆண்டு கச்சா எண்ணெய் ஒரு பேரலுக்கு 10 டாலராக இருந்த நிலையில், 2013 ஆம் ஆண்டு ஒரு பேரல் கச்சா எண்ணெய் 130 டாலராக விற்பனை செய்யப்பட்டது. காங்கிரஸ் ஆட்சி காலத்தில் கச்சா எண்ணெய் விலை உயர்ந்தாலும் பெட்ரோல், டீசல் விலை கட்டுக்குள் வைக்கப்பட்டது.

2014 ஆம் ஆண்டு ஆட்சி மாற்றம் ஏற்படும் போது நேர்முக வரி 55 பைசாகவும், மறைமுக வரி 45 பைசாகவும் இருந்தது. பன்னாட்டு நிறுவனங்களுக்காக நேர்முக வரியை பாஜக தலைமையிலான ஒன்றிய அரசு குறைத்து கொண்டது. பாஜக ஆட்சி பொறுப்பு ஏற்ற போது பெட்ரோல் வரி 10 ரூபாய் ஆகவும், டீசல் வரி 5 ரூபாயும் இருந்தது.

தற்போது பெட்ரோல் வரி 32 ரூபாய் ஆகவும், டீசல் வரி 31 ரூபாய் ஆகவும் உள்ளது. மாநிலங்களில் இருந்து எடுக்கப்பட்ட செஸ் வரியை ஒன்றிய அரசு மாநிலங்களுக்கு பிரித்து கொடுக்காமல் வைத்துள்ளது. பெட்ரோல், டீசல் விலையை ஜி.எஸ்.டி., வரம்புக்குள் கொண்டு வரலாம் என ஒன்றிய அரசு சொல்லவில்லை. உயர்நீதிமன்ற தீர்ப்பில் கொடுப்பட்டதை ஒன்றிய அரசு சுட்டி காட்டியுள்ளது. ஜி.எஸ்.டி வரி வரம்பு குறித்து நீதிமன்றம் உத்தரவு பிறப்பிக்க முடியாது.

ஒன்றிய அரசின் மொத்த வருமானத்தில் 20 சதவீதம் பெட்ரோல், டீசல் வழியாக வருகிறது. பெட்ரோல், டீசல் விலையை ஜி.எஸ்.டி., வரம்புக்குள் கொண்டு வர ஒன்றிய அரசும் விரும்பவில்லை; மாநில அரசுகளும் விரும்பவில்லை. பன்னாட்டு நிறுவனங்களுக்கு வரிகளை ஒன்றிய அரசு குறைத்து உள்ளதால் மக்கள் மீது இரு மடங்கு வரி உயர்த்தப்பட்டு உள்ளது.

எந்தவொரு நாட்டிலும் இல்லாத அளவிற்கு நேர்முக வரியை 100 சதவீதம் ஒன்றிய அரசே எடுத்து கொள்கிறது. மாநிலங்களுக்கு பெட்ரோல், டீசல், ஆல்கஹால் ஆகிய இரு வரி வருவாய் மட்டுமே கிடைக்கிறது. மாநில வரி வருவாயை ஒன்றிய அரசு எடுத்து கொண்டால் மாநிலங்கள் எப்படி நிர்வாகத்தை நடத்த முடியும்?

நிலைமைக்கு ஏற்ப வரியை மாற்றம் செய்யும் உரிமையை மாநில அரசு இழந்து விட்டது. தமிழகத்தில் சூழ்நிலை, சுற்றுச்சூழல் மாறும் போது திமுகவின் நிலைப்பாடும் மாறும். பெட்ரோல், டீசல் விலையில் ஒன்றிய அரசு செஸ் வரியை கைவிட்டால் தமிழக அரசு ஜி.எஸ்.டி., க்குள் வர தயாராக உள்ளோம்.
இவ்வாறு அவர் கூறினார்.

1 comment:

  1. Appo ungaluku government vehicle kudukuranga, petrol and Diesel free, athaan unga kaasu 1 rupee kooda government ku selavu seiyya maatinga, aana naanga ungaluku vote pottu thernthu edutha neenga rate kuraika maatinga, naanga mattum enga kai kasu la tax kattanum, petrol Diesel podanum, ithu Enna niyayam

    ReplyDelete

Post Top Ad