கிருஷ்ணகிரியில் ஒரு சந்தன கடத்தல் வீரப்பன்... ஒற்றை ஆளாகத் தரமான சம்பவம்! - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Monday, September 20, 2021

கிருஷ்ணகிரியில் ஒரு சந்தன கடத்தல் வீரப்பன்... ஒற்றை ஆளாகத் தரமான சம்பவம்!

கிருஷ்ணகிரியில் ஒரு சந்தன கடத்தல் வீரப்பன்... ஒற்றை ஆளாகத் தரமான சம்பவம்!

கிருஷ்ணகிரி வனப்பகுதியில் அத்துமீறி நுழைந்து சந்தனக் கட்டைகள் கொள்ளையடித்து வந்ததாக முதியவர் ஒருவரை வனத்துறையினர் கைது செய்து வந்துள்ளனர்.
கிருஷ்ணகிரி தேன்கனிகோட்டை வனப்பகுதிக்குள் அத்துமீறி நுழைந்து சந்தன கட்டைகளைச் சேகரித்தவருக்கு அபராதம் விதித்து வனத்துறையினர் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிகோட்டை வனச்சரகம் வட்டவடிவுப்பாறை வனப்பகுதியில் தேன்கனிகோட்டை வனச்சரகர் சுகுமார் தலைமையில் ஈஸ்வரன், வெங்கடாசலம், பார்த்தீபன் ஆகியோர் அடங்கிய வனத்துறையினர் ரோந்து பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது வனப்பகுதியின் உள்ளே அத்துமீறி நுழைந்த முதியவர் ஒருவர் 3 கிலோ எடையுள்ள சந்தனக் கட்டைகளை ஒரு பையில் சேகரித்து வைத்திருந்துள்ளார். இதனைப் பார்த்த வனத்துறையினர் அவரை கையும் களமாகப் பிடித்தனர்.


இதனைத்தொடர்ந்து அவரிடம் நடத்திய விசாரணையில் அவர் ஒன்னுகுறுக்கை கிராமத்தைச் சேர்ந்த ராஜப்பா என்பது தெரியவந்தது. இதனையடுத்து அவரிடமிருந்த சந்தனக் கட்டைகளைப் பறிமுதல் செய்த வனத்துறையினர் அவரை மாவட்ட வன அலுவலர் கார்த்திகேயினி முன்பு முன்னிறுத்தினர். தொடர்ந்து ராஜப்பாவிற்கு வனத்துறையினர் 8 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து பணம் கட்டிய பின்பு விடுவித்தனர்.

No comments:

Post a Comment

Post Top Ad