ஏழு மாவட்டங்களில் வெளுத்து வாங்கும் மழை: வானிலை ஆய்வு மையம் - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Saturday, September 4, 2021

ஏழு மாவட்டங்களில் வெளுத்து வாங்கும் மழை: வானிலை ஆய்வு மையம்

ஏழு மாவட்டங்களில் வெளுத்து வாங்கும் மழை: வானிலை ஆய்வு மையம்

வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக செப்டம்பர் 4ஆம் தேதி (இன்று )நீலகிரி மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் மிக கன மழையும், கோயம்பத்தூர், சேலம், ஈரோடு, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், வேலூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன மழையும், கடலோர மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழையும், ஏனைய மாவட்டங்களில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும்.
செப்டம்பர் 5ஆம் தேதி நீலகிரி, கோயம்பத்தூர், கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன மழையும், டெல்டா மாவட்டங்கள், ஏனைய வட மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழையும், தென் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான மழையும் பெய்யக்கூடும்.

செப்டம்பர் 6ஆம் தேதி நீலகிரி, கோயம்பத்தூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன மழையும், ஏனைய மேற்கு தொடர்ச்சி மலை ஒட்டிய (திருப்பூர், தேனி, திண்டுக்கல், தென்காசி) மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மிதமான மழையும், உள் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான மழையும் பெய்யக்கூடும்.

செப்டம்பர் 7, 8 ஆகிய தேதிகளில் மேற்கு தொடர்ச்சி மலை ஒட்டிய (நீலகிரி, கோயம்பத்தூர், திருப்பூர், தேனி, திண்டுக்கல், தென்காசி) மாவட்டங்கள் கடலோர மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும், நகரின் ஒருசில பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 33 மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 26 டிகிரி செல்சியஸ ை ஒட்டி இருக்கும்.

கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக ஏற்காடு (சேலம்) 13, சாத்தனுர் அணை (திருவண்ணாமலை), இல்லையாங்குடி (சிவகங்கை) தலா 6, ஒகேனக்கல் (தர்மபுரி), ஜெயம்கொண்டாம் (அரியலூர்), தலா 5, மணல்மேடு (மயிலாடுதுறை), விருதாச்சலம் (கடலூர்), திருவாலங்காடு (திருவள்ளூர்) தலா 4, மரக்காணம் (விழுப்புரம்), சங்கராபுரம் (கள்ளக்குறிச்சி), பொண்ணை அணை (வேலூர்) தலா 3, எட்டயபுரம் (தூத்துக்குடி), அகரம் சீகூர் (பெரம்பலூர்), காவேரிப்பாக்கம் (ராணிப்பேட்டை), ஆர்.எஸ்.மங்களம் (ராமநாதபுரம்), வடபுதுப்பட்டு (திருப்பத்தூர்) தலா 2, மதுராந்தகம் (செங்கல்பட்டு), ஊத்தங்கரை (கிருஷ்ணகிரி), பெருஞ்சாணி அணை (கன்னியாகுமாரி), பேராவூரணி (தஞ்சாவூர் ), மங்களபுரம் (நாமக்கல்), டி.ஜி .பி அலுவலகம் (சென்னை) தலா 1 சென்டிமீட்டர் மழை பதிவாகியுள்ளது.

No comments:

Post a Comment

Post Top Ad