மீண்டும் தலைதூக்கும் நோக்கு கூலி: இஸ்ரோ லாரியை மடக்கிய தொழிலாளர்கள்! - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Tuesday, September 7, 2021

மீண்டும் தலைதூக்கும் நோக்கு கூலி: இஸ்ரோ லாரியை மடக்கிய தொழிலாளர்கள்!

மீண்டும் தலைதூக்கும் நோக்கு கூலி: இஸ்ரோ லாரியை மடக்கிய தொழிலாளர்கள்!

வாகனங்களில் இருந்து பொருட்களை ஏற்றி, இறக்குவதற்கு சுமை தூக்கும் தொழிலாளர்களை பயன்படுத்தாமல், சொந்த நிறுவனத்தின் ஆட்களை வைத்தோ அல்லது இயந்திரங்கள் மூலமோ அந்த வேலையை செய்தால், அதே வேலைக்கு மனித உழைப்புக்கு ஆகும் தொகையை தொழிலாளர்களிடம் கொடுத்து விட வேண்டும். இதற்கு
நோக்கு கூலி என்று பெயர்.

பொருட்களை இறக்கும்போது தொழிலாளர்கள் அதனை வெறுமனே பார்த்துக் கொண்டிருப்பார்கள். இவ்வாறு நோக்குவதற்கு கூலி தரப்படுவதால் அதற்கு நோக்கு கூலி என்று பெயர். இந்த நோக்கு கூலி நடைமுறை தொழிற்சங்கங்கள் வலுவாக இருக்கும் கேரளாவில் அதிகம் உண்டு. ஒருவேளை இக்கூலியை தர முடியாது என்று சொன்னால் ஒன்றாக திரண்டு வந்து விடுவார்கள்.

இதன் காரணமாக நிறுவனங்களுக்கும் தொழிலாளர்களுக்கும் இடையே அடிக்கடி மோதல்கள் ஏற்பட்டன. இந்த பிரச்சினைக்கு தீர்வு காணும் வகையில், கடந்த 2018ஆம் ஆண்டில் பினராயி விஜயன் தலைமையிலான கேரள அரசு நோக்கு கூலி முறையை ரத்து செய்து உத்தரவிட்டது. ஆனாலும், இந்த நடைமுறை அம்மாநிலத்தில் தொடர்ந்து கொண்டுதான் உள்ளது.

அந்த வகையில், திருவனந்தபுரத்தில் உள்ள தும்பாவில் இருக்கும் விக்ரம் சாராபாய் விண்வெளி மையத்துக்கு வந்த இஸ்ரோ லாரியை சில தொழிலாளா்கள் தடுத்து நிறுத்தி நோக்கு கூலி கேட்டுள்ளனர். இதுகுறித்து இஸ்ரோ அதிகாரி ராஜேஸ்வரி கூறுகையில், “விண்வெளி மையம் அமைக்கப்பட்டதில் இருந்து, இங்கு சுமைகள் கொண்டு வரப்படும் போதெல்லாம் தொழிலாளா்களுக்கு நோக்கு கூலி கொடுக்கப்படுகிறது. நீதிமன்றத் தீா்ப்புக்குப் பிறகு அந்த நடைமுறை இருக்காது என்று நம்பியிருந்தேன். ஆனால், நோக்கு கூலி கேட்டு லாரியை கடந்த ஞாயிற்றுக்கிழமை சில தொழிலாளா்கள் மடக்கினர்.

இந்த லாரியில் உள்ள சுமைகளை அவா்களால் இறக்க முடியாது; இயந்திரத்தால் மட்டுமே இறக்க முடியும் என்று கூறியபோதும், தங்களுக்கு பணம் கொடுத்தால் மட்டுமே வழி விடுவதாக அவா்கள் தெரிவித்தனர். தொழிலாளா்கள் நல அதிகாரி, காவல் துறை மூத்த அதிகாரி ஆகியோா் சம்பவ இடத்துக்கு வந்து அவா்களை சமாதானம் செய்து அனுப்பி வைத்தனா். இதுதொடா்பாக, காவல் துறையிடம் புகாா் கொடுக்கப்பட்டுள்ளது” என்றார்.

No comments:

Post a Comment

Post Top Ad