அதிமுக ஆட்சியால் ஏற்பட்ட நஷ்டம்: வனத் துறையில் என்ன பிரச்சினை? - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Friday, September 3, 2021

அதிமுக ஆட்சியால் ஏற்பட்ட நஷ்டம்: வனத் துறையில் என்ன பிரச்சினை?

அதிமுக ஆட்சியால் ஏற்பட்ட நஷ்டம்: வனத் துறையில் என்ன பிரச்சினை?

சட்டப்பேரவையில் இன்று வனத்துறை மானிய கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்றது.
அப்போது பேசிய அதிமுக சட்டமன்ற உறுப்பினர் திண்டுக்கல் சீனிவாசன், “வனப்பரப்பை அதிகரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும், கடந்த அதிமுக ஆட்சியில் தான் வன உயிர் மோதலில் உயிரிழந்தவர்களுக்கு இழப்பீட்டு தொகையை 4 லட்சம் ரூபாயிலிருந்து 10 லட்சமாக உயர்த்தப்பட்டது” என பேசினார்.
தொடர்ந்து பேசிய வனத்துறை அமைச்சர் ராமசந்திரன், “வன உயிர் மோதலில் உயிரிழந்தவர்களுக்கு இழப்பீடாக ரூ4 லட்சத்தில் இருந்து ரூ 10 லட்சமாக உயர்த்தி வழங்குவதாக அறிவிக்கப்பட்டது ஆனால் இடைக்கால பட்ஜெட்டில் நிதி ஒதுக்கவும் இல்லை, வழங்கவும் இல்லை.
டான் டீ, ரப்பர் தோட்ட கழகம் உள்ளிட்டவை நஷ்டத்தில் இயங்கி வருகின்றன. இதற்கு கடந்த அதிமுக ஆட்சிதான் காரணம். அடுத்த 2 ஆண்டுகளில் லாபகரமானதாக இயங்க நடவடிக்கை எடுக்கப்படும்” என தெரிவித்தார்
பின்னர் பேசிய திண்டுக்கல் சீனிவாசன், “இந்திய அளவிலான வணிகத்தை பொறுத்து விலை உயர்வு, குறைவு அமைகிறது, இதற்கும் தங்களுக்கும் சம்பந்தமில்லை” என தெரிவித்தார்.

No comments:

Post a Comment

Post Top Ad