இருதய சிகிச்சைக்காக நிதியுதவி: டி.ஆர்.பாலுவுக்கு ஒன்றிய அரசு பதில் கடிதம் - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Friday, September 24, 2021

இருதய சிகிச்சைக்காக நிதியுதவி: டி.ஆர்.பாலுவுக்கு ஒன்றிய அரசு பதில் கடிதம்

இருதய சிகிச்சைக்காக நிதியுதவி: டி.ஆர்.பாலுவுக்கு ஒன்றிய அரசு பதில் கடிதம்

பிரதமரின் தேசிய நிவாரண நிதியிலிருந்து தமிழகத்தைச் சேர்ந்தவருக்கு இருதய சிகிச்சைக்காக நிதியுதவி வழங்கியதாக டி.ஆர்.பாலுவுக்கு ஒன்றிய அரசு கடிதம்

திமுக பொருளாளரும், நாடாளுமன்ற திமுக குழுத் தலைவருமான டி.ஆர்.பாலு, காஞ்சிபுரம் மாவட்டம், சாலமங்கலத்தைச் சேர்ந்த, ஜெசிமோள், இருதய நோயினால் பாதிக்கப்பட்டுள்ளதால், பிரதமர் தேசிய நிவாரண நிதியிலிருந்து, உதவி அளிக்குமாறு, கடந்த ஜூலை மாதத்தில், பிரதமர் மோடிக்குக் கடிதம் எழுதியிருந்தார்.

டி.ஆர்.பாலுவின் பரிந்துரையையும் வேண்டுகோளையும் ஏற்று பிரதமர் மோடி ஜெசிமோளின் மருத்துவ சிகிச்சைக்கு ரூ. 50,000 நிதியுதவி வழங்கி உள்ளார்.

இது தொடர்பாக, பிரதமர் அலுவலகம், 8 செப்டம்பர் 2021, அன்று டி.ஆர்.பாலு எம்.பிக்கு அனுப்பியுள்ள கடிதத்தில், பிரதமரின் தேசிய நிவாரண நிதியிலிருந்து ஜெசிமோளின் இருதய நோய் அறுவை சிகிச்சைக்காக ரூபாய் 50,000 சென்னையில் உள்ள மெட்ராஸ் மெடிக்கல் மிஷன் மருத்துவமனைக்கு வழங்கப்படும் என்றும், சிகிச்சை முடிந்த பின்னர், உரிய ஆவணங்களின் நகலை, பிரதமர் அலுவலகத்துக்கு அனுப்பி வைக்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், ஆவணங்கள் கிடைத்த பின்னர், மேற்கண்ட உதவித் தொகையானது உடனடியாக மெட்ராஸ் மெடிக்கல் மிஷன் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்படும் என்றும், பிரதமர் அலுவலகக் கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது'' என இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

Post Top Ad