வண்டியை திருப்பாத லஞ்ச ஒழிப்புத்துறை: விஜயபாஸ்கரா கொக்கா! - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Tuesday, September 21, 2021

வண்டியை திருப்பாத லஞ்ச ஒழிப்புத்துறை: விஜயபாஸ்கரா கொக்கா!

வண்டியை திருப்பாத லஞ்ச ஒழிப்புத்துறை: விஜயபாஸ்கரா கொக்கா!

கடந்த பத்தாண்டுகளாக ஆட்சி, அதிகாரத்தையும் அதனால் கிடைத்த சலுகைகளை அனுபவித்த அதிமுக, தற்போது ஆட்டம் காண தொடங்கியுள்ளது. தேர்தலுக்கு முன்பு தமிழக ஆளுநரிடம் அப்போதைய ஆளுங்கட்சியான அதிமுக அமைச்சர்கள் மீது நீண்டதொரு ஊழல் புகார்கள் தொடர்பான பட்டியலை திமுகவினர் கொடுத்திருந்தனர். தேர்தல் பிரசாரத்தின் போதும்கூட, அதன் மீது கண்டிப்பாக நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஸ்டாலின் தெரிவித்திருந்தார்.



முதல்வராக பதவியேற்றதும் முதலில் கொரோனா தடுப்பு பணிகளில் கவனம் செலுத்திய ஸ்டாலின், தற்போது முன்னாள் அமைச்சர்கள் மீதான ஊழல் வழக்குகளை தூசு தட்டி பூர்வாங்க பணிகளை தொடங்கியுள்ளார். அதன்படி, எஸ்.பி.வேலுமணி, எம்.ஆர்.விஜயபாஸ்கர், கே.சி.வீரமணி என லஞ்ச ஒழிப்புத்துறையின் ரெய்டுகள் நீண்டு கொண்டிருக்கின்றன. ராஜேந்திர பாலாஜிக்கு நீதிமன்றம் மூலம் குடைச்சல் கொடுக்கப்பட்டு வருகிறது.

முன்னதாக, ஒவ்வொரு துறையின் தற்போதைய திமுக அமைச்சர்கள் அவ்வப்போது அந்த துறையில் நடைபெற்ற ஊழல்களை பத்திரிகையாளர் சந்திப்பின்போது போட்டுடைத்தது இதற்கு அச்சாரமாக பார்க்கப்பட்டது. அந்த வகையில், மருத்துவர்கள், செவிலியர்களுக்கு தங்குமிடம், உணவை முறைப்படுத்தியதில் நாளொன்றுக்கு ரூ.30 லட்சம் சேமிக்கப்பட்டதாக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியது அந்தத் துறையில் நடந்துள்ள பல்வேறு ஊழல்களை சுட்டிக்காட்டும் வகையில் அமைந்தது.

அத்துடன், கொரோனாவுக்காக மட்டும் ரூ.12 ஆயிரம் கோடி மதிப்பில் கொள்முதல் செய்யப்பட்டதில் நடந்துள்ள ஊழல்கள் பற்றிய விவரமும் கசிந்து அதன் மீதும் ரகசிய விசாரணை துவங்கியுள்ளதாக கூறப்படுகிறது. அதன்படி பார்த்தால், முன்னாள் சுகாதாரத் துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கரின் வீட்டுக்குத்தான் லஞ்ச ஒழிப்புத்துறையினர் முதலில் வண்டியை கிளப்பியிருக்க வேண்டும். ஆனால், தற்போது வரை அதற்கான சாத்தியக்கூறுகள் தென்படவில்லை.

இதுகுறித்து புதுக்கோட்டை வட்டாரத்தில் விசாரிக்கும் போது, எதற்குமே வாயை திறக்க வேண்டாம் என்ற அறிவுறுத்தல்கள் அவருக்கு சென்றுள்ளதாக கூறுகிறார்கள். அதனால்தான் நீட் விவகாரம், கொடநாடு என எதற்குமே அவரது சைடில் இருந்து எந்த ஒரு ரியாக்‌ஷனும் வரவில்லை என்கிறார்கள்.

No comments:

Post a Comment

Post Top Ad