விமானத்தில் எறும்புகள்: இளவரசர் செல்லவிருந்த விமானம் மாற்றம்! - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Tuesday, September 7, 2021

விமானத்தில் எறும்புகள்: இளவரசர் செல்லவிருந்த விமானம் மாற்றம்!

விமானத்தில் எறும்புகள்: இளவரசர் செல்லவிருந்த விமானம் மாற்றம்!

டெல்லியில் இருந்து லண்டன் செல்லவிருந்த விமானத்தில் எறும்புகள் இருந்ததை அடுத்து, வேறொரு விமானத்தில் பயணிகள் பயணம் மேற்கொண்டனர்.

தலைநகர் டெல்லியில் உள்ள இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்திலிருந்து, பிரிட்டன் தலைநகர் லண்டனுக்கு, ஏர் இந்தியா நிறுவனத்தின் விமானம் செல்லவிருந்தது. இந்த விமானத்தில் பூட்டான் இளவரசர் ஜிக்மே நாம்கியெல் வாங்சுக் இருந்தார். மேலும் சில தொழிலதிபர்களும் இந்த விமானத்தில் பயணம் மேற்கொள்ள இருந்தனர்.

ஆனால், விமானம் புறப்படுவதற்கு முன்னர், பிசினஸ் கிளாஸ் இருக்கைகள் இருந்த பகுதியில் எறும்புகள் ஊர்வது கண்டறியப்பட்டது. இது குறித்து பயணிகள் விமான சிப்பந்திகளிடம் புகார் தெரிவித்தனர். இது குறித்து ஏர் இந்தியா நிறுவனத்தின் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

இதைத் தொடர்ந்து எறும்புகள் இருந்த விமானம் ரத்து செய்யப்பட்டது. அந்த விமானத்திலிருந்த பூட்டான் இளவரசர் ஜிக்மே நாம்கியெல் வாங்சுக் உட்பட பயணிகள் அனைவரும் வேறு விமானத்துக்கு லண்டன் புறப்பட்டனர்.

இதற்கு முன்னதாக, கடந்த ஜூலை மாதம், சவுதி புறப்பட்ட ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம், திருவனந்தபுரத்தில் அவசரமாகத் தரையிறங்கியது. விமானத்தின் ஜன்னலில் விரிசல் இருந்ததால் விமானம் தரையிறக்கப்பட்டது. இருப்பினும் அந்த விமானத்தில் பயணிகள் இல்லை. அது சரக்கு விமானம். இருந்தாலும் பாதுகாப்புக் காரணங்களுக்காக விமானம் அவசரமாக தரையிறக்கப்பட்டது.

கடந்த மே மாதம், அமெரிக்காவுக்குப் புறப்பட்ட ஏர் இந்தியா விமானம், புறப்பட்ட அரை மணி நேரத்திற்குப் பின்னர் மீண்டும் டெல்லிக்கே திரும்பியது. விமானத்தில் வவ்வால் ஒன்று இருந்ததால் விமானம் திரும்பியதோடு வேறு விமானத்தில் பயணிகள் அனுப்பி வைக்கப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

Post Top Ad