13 வயது சிறுமி கடத்தி கூட்டு பலாத்காரம்: 7 பேர் அதிரடி கைது! - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Tuesday, September 7, 2021

13 வயது சிறுமி கடத்தி கூட்டு பலாத்காரம்: 7 பேர் அதிரடி கைது!

13 வயது சிறுமி கடத்தி கூட்டு பலாத்காரம்: 7 பேர் அதிரடி கைது!

மஹாராஷ்டிர மாநிலம் புனேவில், 13 வயது சிறுமியைக் கடத்திச் சென்று 7 பேர் கூட்டாக பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இது தொடர்பாக சம்பந்தப்பட்ட 7 பேரை போலீசார் அதிரடியாக கைது செய்துள்ளனர்.

மஹாராஷ்டிர மாநிலம் புனே ரயில் நிலையத்தில், கடந்த ஆகஸ்ட் மாதம் 31ம் தேதி இரவு, தனது தோழிக்காக, 13 வயது சிறுமி ஒருவர் காத்துக் கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த ஆட்டோ ரிக்ஷா காரர் ஒருவர், இரவு நேரமாகி விட்டதால், வீட்டில் பத்திரமாக விட்டு விடுவதாகக் கூறி, சிறுமியை ஆட்டோ ரிக்ஷாவில் அழைத்துச் சென்றார்.

வழியில் செல்லும் போது, தனது நண்பர்களுக்கு மொபைல் போன் மூலம் அவர் அழைப்பு விடுத்தார். ஆட்டோ ரிக்ஷா காரருடன் இணைந்து கொண்ட 6 பேர் கொண்ட கும்பல், 13 வயது சிறுமியை ஆங்காங்கே மறைவான இடத்தில் வைத்து பல முறை வலுக்கட்டாயமாக கூட்டாக பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர். இதை அடுத்து சிறுமியை மும்பைக்கு செல்லும் பேருந்தில் ஏற்றி விட்டுள்ளனர்.

இதைத் தொடர்ந்து, மகளை காணவில்லை என அவரது தந்தை புனே காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இது குறித்து வழக்குப் பதிவு செய்த போலீசார், சிறுமியை நகரத்தின் பல்வேறு இடங்களில் தேடினர். ஒரு வழியாக சிறுமியை புனேவில் போலீசார் கண்டுபிடித்தனர். அப்போது போலீசாரிடம் தனக்கு நடந்த கொடுமையை பாதிக்கப்பட்ட சிறுமி கூறினார்.

இது குறித்து வழக்குப் பதிவு செய்த போலீசார், 13 வயது சிறுமியை வலுக்கட்டாயமாக கூட்டு பாலியல் பலாத்காரம் செய்த 7 பேரை அதிரடியாக கைது செய்தனர். மேலும் இதில் தொடர்புடைய பலரை தேடி வருகின்றனர். 13 வயது சிறுமி கூட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. குற்றவாளிகளுக்கு கடுமையான தண்டனை அளிக்க வேண்டும் என பொது மக்கள் வலியுறுத்தி உள்ளனர்.

No comments:

Post a Comment

Post Top Ad