பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு ஜாக்பாட் பரிசுத்தொகை அறிவிப்பு!
தமிழகத்தில் கடந்த செப்டம்பர் ஒன்றாம் தேதி முதல் பள்ளி, கல்லூரிகள் திறக்கப்பட்டுள்ளன. 9-12ஆம் வகுப்பு வரை பள்ளி மாணவர்களும், இளங்கலை மற்றும் முதுகலை இறுதியாண்டு மாணவர்களும் வரவழைக்கப்பட்டனர். வகுப்பறைகளில் 50 சதவீத மாணவர்கள் வீதம் சுழற்சி முறையில் வரவழைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் மூன்றாவது அலை எச்சரிக்கையை கவனித்து அதற்கேற்ப மற்ற வகுப்பினரை வரவழைக்க திட்டமிடும். அதுவரை ஆன்லைன் வாயிலான வகுப்புகள் தொடரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
சிறப்பு பேச்சுப் போட்டி
இந்த சூழலில் பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு பேச்சுப்போட்டி நடத்த தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இதுதொடர்பாக தமிழ் வளர்ச்சித்துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில், மகாத்மா காந்தி பிறந்த நாளான அக்டோபர் இரண்டாம் தேதி அனைத்து மாவட்டங்களிலும் பள்ளி, கல்லூரி மாணவரக்ளுக்கு தனித்தனியே பேச்சுப்போட்டி நடைபெறவுள்ளது. போட்டித் தலைப்புகள் போட்டி நடைபெறும் நாளன்று அறிவிக்கப்படும்.
பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு பேச்சுப் போட்டிகள் நடைபெறும் இடங்கள் அந்தந்த மாவட்டத் தமிழ் வளர்ச்சித் துணை இயக்குநர்/ உதவி இயக்குநர் வாயிலாகவும் அறிவிக்கப்படும். போட்டியின் முடிவுகள் அறிவிக்கப்பட்டு பரிசுத் தொகையும், பாராட்டுச் சான்றிதழும் வழங்கப்படும். இந்த போட்டியில் பங்கேற்க ஒவ்வொரு கல்லூரியிலும் 2 பேர் வீதம் கல்லூரி முதல்வர்களே தேர்வு செய்து அனுப்ப வேண்டும்.
No comments:
Post a Comment