ஏழுமலையான் பக்தர்களுக்கு செம குட் நியூஸ் - தேவஸ்தானம் சூப்பர் அறிவிப்பு! - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Sunday, September 19, 2021

ஏழுமலையான் பக்தர்களுக்கு செம குட் நியூஸ் - தேவஸ்தானம் சூப்பர் அறிவிப்பு!

ஏழுமலையான் பக்தர்களுக்கு செம குட் நியூஸ் - தேவஸ்தானம் சூப்பர் அறிவிப்பு!

ஆந்திர மாநிலம் திருப்பதியில் உள்ள ஏழுமலையான் கோவிலில், நாளை முதல் அனைத்து மாநில பக்தர்களும் தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவர் என திருமலை திருப்பதி தேவஸ்தானம் அறிவித்து உள்ளது.

ஆந்திர மாநிலம் திருப்பதியில் உலகப் புகழ் பெற்ற ஏழுமலையான் கோவில் உள்ளது. இக்கோவிலுக்கு இந்தியா மட்டுமின்றி வெளி நாடுகளில் இருந்தும் லட்சக் கணக்கான பக்தர்கள் வருவர். இங்கு பிரசாதமாக வழங்கப்படும் லட்டு மிகவும் பிரசித்தி பெற்றது.

கொரோனா வைரஸ் பரவத் தொடங்கியதில் இருந்தே, கோவிலுக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டதுடன், பக்தர்களின் வருகையும் குறைந்தது. தற்போது கொரோனா பரவல் நாடு முழுவதும் குறைந்து வருகிறது. உள்ளூர் பக்தர்களை தவிர மற்ற மாநில பக்தர்கள் தரிசனம் செய்வதற்கு தேவஸ்தான நிர்வாகம் தடை விதித்திருந்தது. உள்ளூர் பக்தர்களுக்கு மட்டுமே தரிசனத்திற்கு அனுமதி வழங்கப்படுகிறது. மேலும் ஒரு நாளைக்கு குறைந்தபட்ச பக்தர்களே தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டு வருகின்றனர்.

இந்நிலையில் தரிசனம் செய்வது குறித்து தேவஸ்தான நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்து இருப்பதாவது:
நாளை முதல் அனைத்து மாநில பக்தர்களும் தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவர். நாளை முதல் இரவு 11.30 மணி வரை இலவச தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுகிறது. இலவச தரிசனத்திற்காக நாள்தோறும் வழங்கப்பட்டு வந்த 2 ஆயிரம் டிக்கெட்டில் இருந்து 8 ஆயிரம் டிக்கெட்டாக அதிகரிக்கப்பட்டு உள்ளது.
இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டு உள்ளது.

No comments:

Post a Comment

Post Top Ad