மாணவர்களுக்கு சர்ப்ரைஸ் நியூஸ்: வகுப்புகள் முடியும் நேரத்தில் மாற்றம்? - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Friday, September 10, 2021

மாணவர்களுக்கு சர்ப்ரைஸ் நியூஸ்: வகுப்புகள் முடியும் நேரத்தில் மாற்றம்?

மாணவர்களுக்கு சர்ப்ரைஸ் நியூஸ்: வகுப்புகள் முடியும் நேரத்தில் மாற்றம்?

செப்டம்பர் 1ஆம் தேதி முதல் பள்ளிகள், கல்லூரிகள் மீண்டும் திறக்கப்பட்டுள்ளன. 9 முதல் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு நேரடி வகுப்புகள் தொடங்கப்பட்டுள்ள நிலையில் பிற வகுப்பு மாணவர்களுக்கு எப்போது தொடங்குவது என செப்டம்பர் 14ஆம் தேதிக்கு மேல் முடிவெடுக்கப்பட உள்ளதாக பள்ளிக் கல்வித்துறை வட்டாரங்கள் தகவல் தெரிவிக்கின்றன.
கல்வி நிறுவனங்கள் திறந்த பின் பெரியளவில் கொரோனா பாதிப்பு அதிகரிக்கவில்லை. இருந்தபோதிலும் அங்கொன்றும் இங்கொன்றுமாக மாணவர்கள், ஆசிரியர்கள் தொற்றுப் பாதிப்புக்கு உள்ளாகிவருகின்றனர். இந்நிலையில், பள்ளிகளில் தினசரி ஆய்வு செய்ய வேண்டுமென அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

கோவை மாவட்டத்தில், தற்போது வரை, 4 மாணவர்கள், ஆசிரியர்களுக்கு, கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.பள்ளி வளாகத்திற்குள், சமூக இடைவெளி கடைபிடித்தல், உடல் வெப்பநிலை பரிசோதித்தல், வகுப்பு வாரியாக இடைவேளை நேரத்தை மாற்றுதல் உள்ளிட்ட, பல்வேறு நிபந்தனைகள் விதிக்கப்பட்டு, வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளன.

இது முறையாக பின்பற்றப்படுகிறதா என்பதை, தினசரி ஆய்வு செய்து, பார்வையிட்ட பள்ளிகள் குறித்த, பட்டியல் அனுப்ப, வட்டார, மாவட்ட கல்வி அலுவலர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

“ஆய்வின் போது, ஒவ்வொரு பள்ளியிலும் உள்ள, மொத்த மாணவர்கள் எண்ணிக்கை, சுழற்சி முறையில் நடக்கும் வகுப்புகள், மாணவர்களின் பெற்றோர் தடுப்பூசி போட்டுள்ளனரா என்பதை கேட்டறிய வேண்டும். இதோடு, மாணவர்களுக்கான கழிவறை, குடிநீர் அமைப்புகளின் செயல்பாடுகள் குறித்து, நேரில் சென்று ஆய்வு செய்ய வேண்டும்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பள்ளிகளில் ஆசிரியர்கள் பாடம் நடத்தும்போதும், உணவு இடைவேளையின் போதும் மாணவர்கள் தனி மனித இடைவெளியை கடைபிடிக்கின்றனர். முகக் கவசம் அணிந்துள்ளனர். ஆனால் பள்ளி முடிந்து வீடு திரும்பும் போது கொரோனா வழிகாட்டு நெறிமுறைகள் காற்றில் பறக்கின்றன. இதனால் பள்ளி முடிந்து மாணவர்கள் வீடு திரும்பும் நேரத்தை மாற்றியமைக்கும் யோசனையில் பள்ளிக் கல்வித்துறை ஈடுபட்டுள்ளதாக கூறுகிறார்கள். ஒவ்வொரு வகுப்பையும் ஒவ்வொரு நேரத்தில் முடிக்க திட்டமிடப்பட்டு வருகிறது.

No comments:

Post a Comment

Post Top Ad