தி.மு.க., - கூட்டணி கட்சிகள் நாளை போராட்டம் - என்ன காரணம்? - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Sunday, September 19, 2021

தி.மு.க., - கூட்டணி கட்சிகள் நாளை போராட்டம் - என்ன காரணம்?

தி.மு.க., - கூட்டணி கட்சிகள் நாளை போராட்டம் - என்ன காரணம்?

வேளாண் சட்டங்கள், பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு விலை உயர்வு என, மக்கள் விரோத ஒன்றிய பா.ஜ.க., அரசைக் கண்டித்து, நாளை தமிழகம் முழுவதும், தி.மு.க., மற்றும் கூட்டணிக் கட்சிகள் சார்பில் கருப்புக் கொடி போராட்டம் நடைபெற உள்ளது.

ஒன்றிய பா.ஜ.க., அரசுக்கு எதிராக எதிர்க்கட்சிகளை ஒன்றிணைப்பது தொடர்பாக, காங்கிரஸ் கட்சி தலைவர் சோனியா காந்தி தலைமையில், கடந்த மாதம் 20 ஆம் தேதி, எதிர்க்கட்சிகள் ஆலோசனைக் கூட்டம் வீடியோ கான்பரன்சிங் மூலம் நடந்தது.

இதில் காங்கிரஸ், திமுக, திரிணாமூல் காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ், சிவசேனா, ஜார்க்கண்ட் முக்தி மோர்சா, இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் உள்ளிட்ட 19 கட்சிகளின் முக்கிய தலைவர்கள் பங்கேற்றனர். இந்த கூட்டத்தில் ஒன்றிய பா.ஜ.க., அரசின் மக்கள் விரோத, ஜனநாயக விரோத நடவடிக்கைகளைக் கண்டித்து நாட ு முழுவதும் செப்டம்பர் 20 ஆம் தேதி முதல் 30 ஆம் தேதி வரை 10 நாட்கள் நாடு தழுவிய அளவில் தொடர் போராட்டம் நடத்துவது உள்ளிட்ட 11 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
இதை அடுத்து, மக்கள் விரோத - ஜனநாயக விரோத ஒன்றிய பா.ஜ.க., அரசைக் கண்டித்து, செப்டம்பர் 20 ஆம் தேதி தி.மு.க., உள்ளிட்ட கூட்டணிக் கட்சிகளின் தலைவர்கள் கண்டன போராட்டம் நடைபெறும் என்று கூட்டாக அறிவித்தனர். இதன்படி, நாளை காலை 10 மணியளவில் தங்களின் இல்லம் முன்பு திமுக மற்றும் கூட்டணி கட்சி தலைவர்கள், நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் கருப்புக்கொடி ஏந்தி ஒன்றிய அரசை கண்டித்து மாபெரும் போராட்டம் நடத்த உள்ளனர்.



இந்த போராட்டத்தில் திரளாக கலந்து கொள்ள திமுக மற்றும் கூட்டணி தலைவர்கள் தங்களது கட்சியினருக்கு அழைப்பு விடுத்துள்ளனர். கொரோனா பரவல் காரணமாக பொது இடங்களில் கூட்டம் கூடுவதை தவிர்க்க வேண்டும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளதால், அவரவர் வீடுகளுக்கு முன் போராட்டம் நடத்தப்பட உள்ளது.

27ல் விவசாயிகள் பாரத் பந்த்
வேளாண் சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தி, விவசாயிகள் கடந்த 9 மாதங்களாக தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். ஒன்றிய அரசு செவி சாய்க்காததால், பாஜக ஆளும் மாநிலங்களை குறி வைத்து, அவர்களுக்கு எதிராக பிரசாரத்தை விவசாயிகள் தொடங்கி உள்ளனர். சமீபத்தில் உத்தரப்பிரதேசத்தில் நடந்த கிசான் மகா பஞ்சாயத்தில் லட்சக்கணக்கான விவசாயிகள் பங்கேற்றனர்.

இந்த கூட்டத்தில், வரும் 27ம் 'பாரத் பந்த்' நடத்த அனைத்து விவசாய சங்கங்கள் சார்பில் முடிவெடுக்கப்பட்டது. அதன்படி, வரும் 27ம் தேதி வேளாண் சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தியும், ஒன்றிய அரசை கண்டித்தும் பாரத் பந்த் நடைபெற உள்ளது. இந்த பந்துக்கு தமிழகத்தில் காங்கிரஸ், கம்யூனிஸ்ட் உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் ஆதரவு தெரிவித்துள்ளன.

No comments:

Post a Comment

Post Top Ad