ரயில் பெட்டிகளை குத்தகைக்கு விடுகிறது ரயில்வே நிர்வாகம்! - என்ன காரணம்? - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Saturday, September 11, 2021

ரயில் பெட்டிகளை குத்தகைக்கு விடுகிறது ரயில்வே நிர்வாகம்! - என்ன காரணம்?

ரயில் பெட்டிகளை குத்தகைக்கு விடுகிறது ரயில்வே நிர்வாகம்! - என்ன காரணம்?

தனியார் நிறுவனங்களிடம் ரயில் பெட்டிகளை விற்பனை செய்வதற்கும், குத்தகைக்கு விடுவதற்கும் ரயில்வே துறை திட்டமிட்டு உள்ளது.

ரயில் பெட்டிகளை விருப்பமுள்ள சுற்றுலா நடத்துனர்களுக்கு குத்தகைக்கு விடுவதன் மூலம், கலாச்சாரம், மதம் மற்றும் இதர சுற்றுலா துறையின் ஆற்றலை பயன்படுத்திக் கொள்ள, இந்திய ரயில்வே திட்டமிட்டு உள்ளது. ஆர்வமுள்ள தரப்பினரின் விருப்பத்துக்கு ஏற்ப ரயில் பெட்டிகள் குத்தகைக்கு விட திட்டமிடப்பட்டு உள்ளது. வெற்று ரயில் பெட்டிகளையும் குத்தகைக்கு எடுக்க முடியும். ரயில் பெட்டிகளை விலைக்கு வாங்கவும் முடியும்.

குத்தகைக்கு எடுக்கப்படும் ரயில் பெட்டிகளில் சிறிய அளவிலான மாற்றங்களுக்கும் அனுமதி அளிக்கப்படுகிறது. குறைந்தது 5 ஆண்டு காலத்துக்கு, ரயில் பெட்டிகளை குத்தகைக்கு எடுக்க முடியும்; ரயில் பெட்டிகளின் ஆயுள் வரை குத்தகையை நீட்டிக்க முடியும். குறைந்தபட்சம் 16 பெட்டிகளுடன் கூடிய ரயிலை மட்டுமே விலைக்கு வாங்கவோ அல்லது குத்தகைக்கு பெறவோ முடியும்.

ஆர்வம் உள்ளவர்களுக்கு தகுதி அடிப்படையில் எளிமையான பதிவு முறை. குத்தகை கட்டணம் உட்பட இதர நியாயமான கட்டணங்களை ரயில்வே விதிக்கும். சரியான நேரத்தில் செயல்படுவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும். ரயில் பெட்டிகள் சீரமைப்பு மற்றும் பயண திட்டங்களுக்கு சரியான நேரத்தில் ஒப்புதல்.

ரயிலுக்குள் விளம்பரத்துக்கு அனுமதி, ரயில் பெட்டிகளுக்கு பிராண்ட் பெயர் வைக்கவும் அனுமதி. இந்த சுற்றுலா ரயில் திட்டங்களுக்கான கொள்கைகள், விதிமுறைகள், நிபந்தனைகளை உருவாக்க, நிர்வாக இயக்குனர் அளவிலான குழுவை ரயில்வே அமைச்சகம் உருவாக்கி உள்ளது.

No comments:

Post a Comment

Post Top Ad