பேசாம இப்படி ஆயிருக்கலாம்: கனிமொழி ஏக்கம்! - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Wednesday, September 15, 2021

பேசாம இப்படி ஆயிருக்கலாம்: கனிமொழி ஏக்கம்!

பேசாம இப்படி ஆயிருக்கலாம்: கனிமொழி ஏக்கம்!

கொரோனாவை காரணம் காட்டி எம்பிக்களின் தொகுதி மேம்பாட்டு நிதியை ரத்து செய்துள்ளது. இதனை சுட்டிக்காட்டி பேசிய திமுக எம்.பி.
கனிமொழி, சட்டமன்ற உறுப்பினர் ஆகியிருக்கலாமோ என்று தோன்றக் கூடிய அளவுக்கு இருப்பதாக தனது ஏக்கத்தை வெளிப்படுத்தியுள்ளார்.

திருவள்ளூர் மேற்கு மாவட்டம், திருத்தணியில், மாநிலங்களவை உறுப்பினராக இருந்த போது ஒதுக்கிய நாடாளுமன்ற உறுப்பினர் தொகுதி வளர்ச்சி நிதியில் கட்டப்பட்ட உயர் மின் கோபுர விளக்கை திமுக மகளிரணிச் செயலாளரும், தூத்துக்குடி தொகுதி எம்.பி.யுமான கனிமொழி திறந்து வைத்தார்.

அதன் பிறகு பேசிய கனிமொழி, “நிதியே இல்லை என்று சொல்லக் கூடிய நிலையில் மக்களவை உறுப்பினர்களூம், மாநிலங்களவை உறுப்பினர்களூம் நின்றுகொண்டிருக்கிறோம். எந்தக் காலகட்டத்தில் மக்களுக்கு நிதி தேவையோ அந்த நேரத்தில் நாடாளுமன்ற உறுப்பினரின் நிதியை அதிகப்படுத்துவதற்கு பதிலாக நிறுத்தப்பட்டிருக்கிறது. ஒன்றிய அரசு அதிகாரங்களை எல்லாம் குவித்து வைத்துக் கொண்டு, நாங்களே எல்லா உரிமைகளையும் வைத்திருப்போம் என்று நினைக்கக் கூடிய ஆட்சி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது” என்று குற்றம் சாட்டினார்.

ஒன்றிய அரசாங்கம் கொரோனாவை காரணம் காட்டி எம்பிக்களின் தொகுதி மேம்பாட்டு நிதியை ரத்து செய்துவிட்டது. இந்த நேரத்தில் நம்முடைய முதல்வர் ஸ்டாலின், மக்களின் அடிப்படைத் தேவையை புரிந்துகொண்டு சட்டமன்ற உறுப்பினர்களின் தொகுதி மேம்பாட்டு நிதி மூன்று கோடி ரூபாயை பயன்படுத்தும் உரிமையை சட்டமன்ற உறுப்பினர்களுக்கே வழங்கும் முத்தாய்ப்பான அறிவிப்பை வெளியிட்டிருக்கிறார். இவையெல்லாம் பார்க்கும்போது, சட்டமன்ற உறுப்பினர் ஆகியிருக்கலாமோ என்று தோன்றக் கூடிய அளவுக்கு இருக்கிறது என்றும் கனிமொழி அப்போது தெரிவித்தார்.

மேலும் அவர் பேசுகையில், “நீட் தேர்வை திணித்து நம் பிள்ளைகளுக்காக கொண்டுவந்த மருத்துவக் கல்லூரிகளில் நம் பிள்ளைகள் படிக்க முடியாத நிலையை உருவாக்கி வைத்திருக்கிறார்கள். அதையெல்லாம் உடைத்து நம் பிள்ளைகளை மீண்டும் மருத்துவப் படிப்புகளை படிக்க வைப்பதற்காகத்தான்

நீட் விலக்கு தீர்மானம் சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்டிருக்கிறது. இதில் முதல்வர் நிச்சயம் வெற்றிபெறுவார்” என்றார்

No comments:

Post a Comment

Post Top Ad