சமூகநீதி பயணத்தில் இது வெற்றி ஆண்டு; வீரவணக்கம் செலுத்தும் ராமதாஸ்! - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Wednesday, September 15, 2021

சமூகநீதி பயணத்தில் இது வெற்றி ஆண்டு; வீரவணக்கம் செலுத்தும் ராமதாஸ்!

சமூகநீதி பயணத்தில் இது வெற்றி ஆண்டு; வீரவணக்கம் செலுத்தும் ராமதாஸ்!

பாமக நிறுவனர்

ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்தியாவின் சமூகநீதி வரலாற்றில் 1980-ஆம் ஆண்டில் தொடங்கி 1989-ஆம் ஆண்டு வரை நாம் நடத்திய வன்னியர் தனி இட ஒதுக்கீட்டுப் போராட்டத்துக்கு இணையாக எந்தப் போராட்டத்தையும் ஒப்பிட்டுக் கூற முடியாது. வன்னியர் சமுதாயத்தை கல்வியிலும், வேலைவாய்ப்பிலும் போதிய பிரதிநிதித்துவம் இல்லாத சமுதாயம் என்று கூட கூற முடியாது. பெரும்பான்மையான வன்னிய மக்கள் கல்வியின் வாசத்தைக் கூட அறியாதவர்களாக, கையெழுத்துக் கூட போடுவதற்கு தெரியாமல் கைரேகை வைக்கும் நிலையில் தான் இருந்தனர். ஒட்டுமொத்த தமிழ்நாட்டுக்கும் உணவு படைக்கும் அளவுக்கு விவசாயத்தை செய்து வருவது வன்னியர்கள் தான் என்றாலும் கூட, கல்வியிலும், வேலைவாய்ப்பிலும் அவர்கள் ஒடுக்கியே வைக்கப்பட்டு இருந்தனர். அந்நிலையிலிருந்து அவர்களை மீட்கவே வன்னியர் இட ஒதுக்கீடுப் போராட்டத்தைத் தொடங்கினோம்.


வன்னியர்களுக்கு கல்வியிலும், வேலைவாய்ப்பிலும் 20% தனி இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்ற நமது கோரிக்கையில் உள்ள நியாயத்தை அரசுக்கு உணர்த்துவதற்காக பல்வேறு கட்ட போராட்டங்களை நடத்தியும் பயனில்லாத நிலையில் தான் 1987-ஆம் ஆண்டு செப்டம்பர் 17ஆம் நாள் தந்தை பெரியாரின் பிறந்த நாளில் ஒரு வார கால தொடர் சாலை மறியல் போராட்டத்தைத் தொடங்கினோம். நமது போராட்டம் வெற்றி பெற்று விடக் கூடாது என்ற எண்ணத்தில் அடக்குமுறைகளை காவல்துறை கட்டவிழ்த்து விட்டது. ஒரு கட்டத்தில் காவல்துறையினர் நடத்திய கண்மூடித்தனமானத் துப்பாக்கிச் சூடு, அதைத் தொடர்ந்து அவர்கள் நடத்திய கொடியத் தாக்குதல்களில் பாட்டாளி சொந்தங்கள் 21 பேர் தங்களின் இன்னுயிரை ஈந்தனர்.

பார்ப்பனப்பட்டு ரெங்கநாதக் கவுண்டர், சித்தணி ஏழுமலை, ஒரத்தூர் ஜெகநாதன், முண்டியம்பாக்கம் சிங்காரவேலு, கயத்தூர் முனியன், கயத்தூர் முத்து, கோலியனூர் கோவிந்தன், கோலியனூர் விநாயகம், சிறுதொண்டமாதேவி தேசிங்கு, தொடர்ந்தனூர் வேலு, கயத்தூர் தாண்டவராயன், பார்ப்பனப்பட்டு வீரப்பன், பேரங்கியூர் அண்ணாமலைக் கவுண்டர், அமர்த்தானூர் மயில்சாமி, குருவிமலை முனுசாமி நாயகர், சிவதாபுரம் குப்புசாமி, கொழப்பலூர் முனுசாமி கவுண்டர், வெளியம்பாக்கம் இராமகிருஷ்ணன், மொசரவாக்கம் கோவிந்தராஜ் நாயகர், கடமலைப்புத்தூர் மணி, புலவனூர் ஜெயவேல் பத்தர் ஆகிய 21 பாட்டாளிகளும் செய்த தியாகம் ஈடு இணையற்றது. அவர்களுக்குப் பிறகும் பலர் நமது சமூகநீதிப் போராட்டத்தில் உயிர்த்தியாகம் செய்துள்ளனர். அவர்களின் தியாகம் என்ற உரம் தான் நமது சமூகநீதிப் போராட்டத்தை தழைக்க வைக்கிறது. அவர்களையும், அவர்கள் செய்த தியாகங்களையும் நாம் இன்று மட்டுமின்றி, என்றும் போற்ற வேண்டும்.



21 உயிர்களைத் தியாகம் செய்து மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான 20% இட ஒதுக்கீட்டை நாம் தான் பெற்றுக் கொடுத்தோம் என்றாலும், அதில் நமக்கு போதிய பிரதிநிதித்துவம் கிடைக்காத அளவுக்கு அதன் பயன்களை மற்றவர்களே அனுபவித்தனர். அதனால் ஏற்பட்ட சமூக அநீதிக்கு எதிராகத் தான் வன்னியர்கள் இட ஒதுக்கீட்டுப் போராட்டத்தை தீவிரப்படுத்த வேண்டும் என்று கடந்த ஆண்டு செப்டம்பர் 17-ஆம் நாள், ‘‘சுக்கா.... மிளகா.... சமூகநீதி?’’ நூல் வெளியீட்டு விழாவில் வலியுறுத்தினேன். அதைத் தொடர்ந்து போராட்டத்திற்கான செயல்திட்டங்களை வகுத்தோம்; 6 கட்டங்களாக தலைநகர் சென்னையில் தொடங்கி கிராமப்பகுதிகள் வரை அறப்போராட்டங்களை நடத்தினோம். பாட்டாளி மக்கள் கட்சியின் இளைஞரணித் தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் தலைமையில் நாம் நடத்திய ஆறு கட்ட போராட்டங்கள் வன்னியர் இட ஒதுக்கீட்டுப் போராட்ட வரலாற்றில் முக்கியத் திருப்பு முனையாகு

No comments:

Post a Comment

Post Top Ad