பள்ளிகள் திறப்பு... அரசுக்கு வந்தது புதிய சிக்கல்! - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Wednesday, September 15, 2021

பள்ளிகள் திறப்பு... அரசுக்கு வந்தது புதிய சிக்கல்!

பள்ளிகள் திறப்பு... அரசுக்கு வந்தது புதிய சிக்கல்!

திருநெல்வேலியை சேர்ந்த அப்துல்வஹாதீன் உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் பொதுநல மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார் அதில், "தமிழக அரசு 9-ஆம் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு நேரடி வகுப்புகளை தொடங்கி உள்ளது. அதே நேரத்தில் ஆன்லைன் வகுப்புகளும் நடைபெற்று வருகின்றன.

18 வயதுக்கு கீழ் உள்ள குழந்தைகளுக்கு கொரோனா தடுப்பூசி கண்டுபிடிக்கப்படாமல் உள்ளது. அதே நேரத்தில் கொரோனா நோய் தொற்றின் 3-வது அலை அதிக அளவில் குழந்தைகளை பாதிக்கும் என கூறப்படுகிறது. தற்போது இருக்கும் குழந்தைகளே நாளைய தூண்களாக இருக்கக் கூடியவர்கள்.

சில பள்ளிகளில் மாணவர்களை கண்டிப்பாக நேரடி வகுப்பிற்கு வரவேண்டும் என கூறுகின்றனர். மேலும் சில பள்ளிகளில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை சரியாக பின்பற்றுவதில்லை.

சில பெற்றோர்கள் ஆன்லைன் வகுப்பு மூலம் சரியாக மாணவர்கள் கற்பித்தல் இல்லை என்று கருதி நேரடி வகுப்பிற்கு அனுப்புகின்றனர். இவற்றின் காரணமாக அனைத்து மாணவர்களும் பள்ளிக்குச் செல்வதால் சமூக இடைவெளியை பின்பற்ற முடியாத சூழ்நிலை ஏற்படுகிறது.

எனவே 9 ஆம் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு வரை மாணவர்கள் நேரடி வகுப்புகளுக்கு செல்ல வேண்டும் என்ற அரசாணைக்கு இடைக்கால தடை விதிக்க வேண்டும். மேலும் 9 ஆம் வகுப்பு முதல் 12- ஆம் வகுப்பு வரை உள்ள மாணவர்கள் பள்ளி செல்ல தடை விதிக்க வேண்டும்." என மனுவில் குறிப்பிட்டிருந்தார்.

இந்த மனு நீதிபதிகள் துரைசுவாமி, முரளிசங்கர் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, 'மாணவர்கள் கட்டாயம் நேரடி வகுப்பிற்கு வர வேண்டும் என பள்ளிகளில் வற்புறுத்தப்படுகிறது' என தெரிவிக்கப்பட்டது.

இதனையடுத்து நீதிபதிகள், 'கட்டாயமாக மாணவர்கள் பள்ளிக்கு வரவேண்டும் என கூறும் பள்ளிகளின் விவரங்களை மனுதாரர் தெரிவித்தால் அந்த பள்ளிகள் மீது நடவடிக்கை எடுக்க அரசுக்கு உத்தரவிடலாம்' எனத் தெரிவித்தனர்.

மேலும் வழக்கு குறித்து தமிழ்நாடு அரசு முதன்மை செயலர், பள்ளிக்கல்வித் துறை செயலாளர் ஆகியோர் பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கு விசாரணையை செப்டம்பர் 30 ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

No comments:

Post a Comment

Post Top Ad