போக்சோ வழக்கில் இந்த தீர்ப்பா?; அதிரடி காட்டிய ஷ்பெஷல் கோர்ட்!
சிறுமியை பலாத்காரம் செய்த வாலிபருக்கு வேலூர் மாவட்ட போக்சோ சிறப்பு நீதிமன்றம் சூப்பரான தண்டனை வழங்கி தீர்ப்பளித்தது. இந்த தீர்ப்பு குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களில் ஈடுபடுவோருக்கு தக்கபாடம் அளித்துள்ளது.சிறுமியை பலாத்காரம் செய்த வாலிபருக்கு வேலூர் மாவட்ட போக்சோ சிறப்பு நீதிமன்றம் சூப்பரான தண்டனை வழங்கி தீர்ப்பளித்தது. இந்த தீர்ப்பு குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களில் ஈடுபடுவோருக்கு தக்கபாடம் அளித்துள்ளது.
திருப்பத்தூர் அருகே உள்ள புதுப்பாளையம், கொடுமாம்பள்ளி கிராமத்தை சேர்ந்தவர் கிருஷ்ணராஜ் என்கிற தங்கராஜ் (29). இவர், கடந்த 2013 ஆம் ஆண்டு 18 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ததாக கூறப்படுகிறது. இதுபற்றி யாரிடமாவது சொன்னால் கொன்றுவிடுவேன் என்று சிறுமியை தங்கராஜ் மிரட்டியுள்ளார்.
இதனால் அச்சமடைந்த சிறுமியும் தனக்கு நேர்ந்த கொடுமைக் குறித்து பெற்றோரிடம் கூட சொல்லாமல் மறைத்துள்ளார். இதனிடையே, சிறுமிக்கு அடிக்கடி வயிற்று வலி ஏற்பட்டதால் பெற்றோர் மருத்துவமனைக்கு அழைத்துச்சென்று பரிசோதனை செய்துள்ளனர்.
பரிசோதனையில் சிறுமி கர்ப்பம் அடைந்திருப்பது தெரிய வந்தது. இதனால் அதிர்ச்சியடைந்து பெற்றோரிடம் தனக்கு நேர்ந்த கொடுமையை சிறுமி விவரித்து கூறியுள்ளார்.இதுகுறித்து, திருப்பத்தூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகாரளிக்கப்பட்டது. புகாரளிக்கும்போது, சிறுமி 6 மாதம் கர்ப்பமாக இருந்துள்ளார். எனவே ‘போக்சோ’ சட்டப்பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்த போலீசார் தங்கராஜை கைது செய்தனர்.
இந்த வழக்கு விசாரணை வேலூர் மாவட்ட ‘போக்சோ’ சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இவ்வழக்கில் நீதிபதி ரவி செப்டம்பர் 6 ஆம் தேதியான இன்று தீர்ப்பு வழங்கினார்.
அதில் தங்கராஜ் மீது குற்றம் உறுதி செய்யப்பட்டதால் அவருக்கு ஆயுள் தண்டனை விதித்து நீதிபதி அதிரடியாக தீர்ப்பளித்தார். இதையடுத்து, பலத்த போலீஸ் பாதுகாப்புடன் வேலூர் மத்திய சிறையில் தங்கராஜ் அடைக்கப்பட்டார்.
No comments:
Post a Comment